ஐசிசி தரவரிசை: டி20ல் இந்தியா முதலிடம்

ஐசிசி வெளியிட்டிருக்கும் தரவரிசை பட்டியலில் டி20 போட்டிகளில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது.  

Written by - க. விக்ரம் | Last Updated : May 4, 2022, 04:23 PM IST
  • ஐசிசி தரவரிசை
  • ஐசிசி தரவரிசை வெளியீடு
  • டி20 போட்டிகளில் இந்தியா முதலிடம்
ஐசிசி தரவரிசை: டி20ல் இந்தியா முதலிடம் title=

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி வருடந்தோறும் டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி 20 ஆகிய போட்டிகளில் பங்கேற்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது.

அந்தவகையில் தற்போது சென்ற ஆண்டுக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டிருக்கிறது. அதன்படி, பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் போட்டிகளில் 128 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்திருக்கிறது.

Australia

இந்தியா 119 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து 111 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

அதேபோல் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில், நியூசிலாந்து முதல் இடத்தை பிடித்திருக்கிறது. மேலும் டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் 270 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தை பிடித்திருக்கிறது.

Australia

265 புள்ளிகளுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்தையும், 261 புள்ளிகளுடன் பாகிஸ்தான் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

மேலும் படிக்க | எதற்காக பேட்டிங் தேர்வு?... ஹர்திக் பாண்டியாவின் விளக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News