நார்த் சவுண்ட்: U-19 உலகக் கோப்பையை இந்திய அணி 5வது முறையாக வென்று வரலாறு படைத்துள்ளது. இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.
கடந்த பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு, மும்பை வான்கடே மைதானத்தில் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) ஒரு சிக்ஸர் அடித்து இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று தந்தார், அதே பாணியில், தினேஷ் பனா இங்கிலாந்துக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை (Under 19 World Cup) இறுதிப் போட்டியில் சிக்ஸர் அடித்து பட்டத்தை வென்று தந்தார்.
ALSO READ | U19CWC: 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா
இந்தியாவுக்கு 190 ரன்கள் இலக்காக கிடைத்தது
19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக்கோப்பை வெஸ்ட் இண்டீஸ்-சில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. போட்டியின் தொடக்கத்திலேயே, இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேக்கப் 2 ரன்னிலும், கேப்டன் டாம் பிரஸ்ட் ரன் ஏதும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர். இறுதியாக இங்கிலாந்து அணி 44.5 ஓவர்களுக்குள், 189 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் தொடர்ச்சியாக 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 47.4 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்களைக் குவித்து வெற்றிக் கோப்பையை கைப்பற்றினர்.
இந்த போட்டியில், ராஜ் பாவா ஆட்ட நாயகனாக தேர்தெடுக்கப்பட்டார். இந்திய ஜூனியர் அணி ஏற்கனவே 2000, 2008, 2012 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்றுள்ளன. தற்போது 5 வது முறையாக மீண்டும் உலகக்கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ALSO READ | கோலி தலைமையில் உலகக்கோப்பை வென்ற இந்தியா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR