இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது...

இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்தியா 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற சமநிலை பெற்றுள்ளது.

Last Updated : Feb 8, 2019, 02:53 PM IST
இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது...  title=

02:47 PM 08-02-2019

இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது... ரிஷாப் பன்ட் 36(27), டோனி 19(17) கூட்டணியில் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா.

இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்தியா 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற சமநிலை பெற்றுள்ளது.


02:06 PM 08-02-2019

50 ரன்கள் எடுத்த நிலையில் அணித்தலைவர் ரோகித் ஷர்மா 50(29) வெளியேறினார்.

தற்போது - 10 ஓவர்கள் | 1 விக்கெட் | 83 ரன்கள்
களத்தில் - ரிஷாப் பன்ட் 1(3) | ஷிகர் தவான் 28(28)


01:08 PM 08-02-2019

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற 159 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆட்டத்தின் முற்பாதியில் பேட்டிங் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் விளையாடி, 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்துள்ளது. இதனையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம்காணுகிறது.

நியூசிலாந்து அணி தரப்பில் கோலின் 50(28), ரோஸ் டெய்லர் 42(36) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்துள்ளனர். இந்தியா தரப்பில் குர்னல் பாண்டயா 3 விக்கெட், கலீல் அகமது 2 விக்கெட் குவித்துள்ளனர்.


12:04 PM 08-02-2019

அடுத்தடுத்து இரண்டு விக்கெட் இழந்தது நியூசி... குர்னால் பாண்டயாவின் அபார் பந்துவீச்சல் கோலின் முன்றோ 12(12), டெய்ரி மிட்சல் 1(2) ரன்களில் வெளியேறினர்.

தற்போது - 6 ஓவர்கள் | 3 விக்கெட் | 43 ரன்கள்
களத்தில் - ரோஸ் டெய்லர் 0(0) | விள்ளியம்சன் 14(7)


11:56 AM 08-02-2019

முதல் விக்கெட்டை இழந்தது நியூசிலாந்து.... ஆட்டத்தின் 2.3-வது பந்தில் டிம் செய்பர்ட் 12(12) ரன்களில் வெளியேறினார்!

தற்போது - 5 ஓவர்கள் | 1 விக்கெட் | 40 ரன்கள்
களத்தில் - முன்றோ 12(11) | விள்ளியம்சன் 14(7)


நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் மற்றும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது டி20 தொடர் நடைப்பெற்று வருகிறது.

முன்னதாக கடந்த பிப்., 6-ஆம் நாள் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நடைப்பெற்றது. இப்போட்டியில் இந்தியா 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று எட்டன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடுகிறது.

அணி விவரம்...

இந்தியா: ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், ரிஷாப் பன்ட், தினேஷ் கார்த்திக், தோனி, விஜய் சங்கர், ஹார்டிக் பாண்டயா, குர்னல் பாண்டயா, சாஹல், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது.

நியூசிலாந்து: டிம் செய்பட், கோலின் முன்றோ, கேன் வில்லியம்ஸ், டேரி மிட்சல், ரோஸ் டைலர், கோலின் டி கிராண்டோம், சாட்னர், ஸ்காட் குக்கெயிலின், சௌதி, இஷ் சௌதி, பெரகெசன்.

Trending News