INDvsSA: கூட்டணி போட்டு தென்னாப்பிரிக்காவை காலி செய்த அர்ஷ்தீப் - சாஹர்

அர்ஷ்தீப் மற்றும் தீபக் சாஹர் வேகபந்துவீச்சு கூட்டணியில் திக்குமுக்காடிய தென்னாப்பிரிக்கா அணி, இந்திய அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் தோல்வியை தழுவியது.

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 29, 2022, 09:01 AM IST
  • இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் 20 ஓவர் போட்டி
  • 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
  • பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்திய இந்திய அணி
INDvsSA: கூட்டணி போட்டு தென்னாப்பிரிக்காவை காலி செய்த அர்ஷ்தீப் - சாஹர் title=

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் 20 ஓவர் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் எடுத்தார். ஜஸ்பிரித் பும்ரா களமிறங்குவார் என எதிர்பார்ப்பட்ட நிலையில் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. இளம் வேகப்பந்துவீச்சு படையுடன் களமிறங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே தென்னாப்பிரிக்கா அணியை திக்குமுக்காட செய்தது. சாஹர் மற்றும் அர்ஷ்தீப் கூட்டணி போட்டு தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்பினர். 

மேலும் படிக்க | தென்னாபிரிக்க தொடரைவிட்டு விலகிய முக்கிய வீரர்! இந்திய அணிக்கு பின்னடைவு!

தொடக்க வீரராக களமிறங்கிய தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமாவை கிளீன் போல்டாக்கினார் சாஹர். முதல் ஓவரின் கடைசி பந்தில் அவருடைய விக்கெட் விழ, அடுத்த ஓவரில் டிகாக் மற்றும் ரூசோவ் என வரிசையாக காலி செய்தார் அர்ஷ்தீப் சிங். அடுத்தடுத்த ஓவர்களிலும் தென்னாப்பிரிக்கா அணியின் வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்ப, 9 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தது. தனியொருவராக மார்க்ரம் மட்டும் 25 ரன்கள் எடுத்ததால், அந்த அணி சரிவில் இருந்து மெல்ல மீண்டது. 

பின்வரிசையில் இறங்கிய பர்னல் 24 ரன்களும், மகாராஜ் 41 ரன்களும் எடுக்க, 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்தது. 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆரம்பத்திலேயே கேப்டன் ரோகித் சர்மா, ரன் கணக்கை தொடங்காமலேயே விக்கெட்டை இழக்க அடுத்து வந்த கோலி 3 ரன்களில் நடையைக் கட்டினார். இருப்பினும் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் நிலைத்து நின்று விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டு வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். முடிவில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் சூர்யகுமார் யாதவ் 50 ரன்களும், கே.எல்.ராகுல் 51 ரன்களும் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.  

மேலும் படிக்க | இந்திய அணிக்கு துணை கேப்டனாகும் சஞ்சு சாம்சன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News