12:20 28-12-2018
- Wicket - 22.5-வது பந்தில் ரோகித் ஷர்மா 5(18) வெளியேறினார்!
ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர் பேட் கும்மிஸின் சிறப்பான பந்துவீச்சால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஹேசல்வுட் 1 விக்கெட் எடுத்துள்ளார்.
22.5: WICKET! R Sharma (4) is out, c Shaun Marsh b Josh Hazlewood, 44/5 https://t.co/xZXZnUNaTU #AusvInd
— BCCI (@BCCI) December 28, 2018
தற்போதைய நிலவரப்படி இந்தியா 25 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் குவித்துள்ளது. ரிஷாப் பன்ட் 0(1), அகர்வால் 28(78) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!
அடுத்தடுத்து மூன்று விக்கெட்... ஆஸி., பந்துவீச்சில் திணறும் இந்தியா...
11:41 28-12-2018
#Wicket - 14.2 புஜாரா 0(2) ரன்களில் வெளியேறினார்!
#Wicket - 14.6 விராட் கோலி 0(4) ரன்களில் வெளியேறினார்!
#Wicket - 16.1 ரஹானே 1(2) ரன்களில் வெளியேறினார்!
3rd Test. 16.1: WICKET! A Rahane (1) is out, c Tim Paine b Pat Cummins, 32/4 https://t.co/xZXZnUNaTU #AusvInd
— BCCI (@BCCI) December 28, 2018
தற்போதைய நிலவரப்படி 17 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் ஷர்மா 1(1), மயங்க் அகர்வால் 18(48) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!
11:24 28-12-2018
151 ரன்களுக்கு ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டை இழந்த நிலையில், இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாட்டை துவங்கி விளையாடி வருகின்றது. இந்திய அணி தரப்பில் பூமரா 6 விக்கெட்டுகளை எடுத்தார்.
Six wickets for Jasprit Bumrah. Australia 151. India will walk out to bat with a lead of 292 runs #TeamIndia #AUSvIND pic.twitter.com/z1pST3m7q5
— BCCI (@BCCI) December 28, 2018
இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் இந்தியா ஆட்டத்தின் 12.6 வது பந்தில் தனது முதல் விக்கெட்டினை [ஹனுமன் விஹாரி 13(45)] இழந்தது. தற்போது 14 ஓவர்கள் முடிந்த நிலையில் மாயங்க் அகர்வால் 15(39), புஜாரா 0(0) ரன்களுடன் களத்தில் உள்ளனர்
09:43 28-12-2018
தேநீர் இடைவேளை வரை ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட 298 ரன்கள் பின்தங்கி உள்ளது.
Tea time here at the MCG on Day 3 as Australia move to 145/7. Australia trail by 298 runs. Join us for the final session of play in a bit #AUSvIND pic.twitter.com/VuZjKeoUon
— BCCI (@BCCI) December 28, 2018
138 ரன்களுக்கு ஏழாவது விக்கெட்டை பறிகொடுத்த ஆஸ்திரேலியா அணி. இந்த விக்கெட்டை ஷமி கைப்பற்றினார்.
3rd Test. 60.6: WICKET! P Cummins (17) is out, b Mohammed Shami, 138/7 https://t.co/xZXZnUNaTU #AusvInd
— BCCI (@BCCI) December 28, 2018
08:19 28-12-2018
102 ரன்களுக்கு ஆறாவது விக்கெட்டை பறிகொடுத்த ஆஸ்திரேலியா அணி. இந்த விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார். இந்தியாவை வேதா 341 ரன்கள் பின்தங்கி உள்ளது ஆஸ்திரேலியா.
43.3: WICKET! M Marsh (9) is out, c Ajinkya Rahane b Ravindra Jadeja, 102/6 https://t.co/xZXZnUNaTU #AusvInd
— BCCI (@BCCI) December 28, 2018
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதைத்தொடர்ந்து தற்போது டெஸ்ட் தொடர் நடைப்பெற்று வருகின்றது.
நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடரில் இருஅணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளது.
இந்தநிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் எனப்படும் மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் நாள் மெல்பர்ன் மைதானத்தில் துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
தொடக்க வீரர்களாக ஹனுமா விஹாரி 8(66) ரன்களில் வெளியேற, மற்றொரு வீரரான மயங்க் அகர்வால் 76(161) ரன்கள் குவித்தார். மயங்க் அகர்வாலின் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை தொடர்ந்து களமிறங்கிய புஜாரா 106(319) ரன்கள் குவித்து தனது 17-வது டெஸ்ட் சதத்தினை அடித்தார். இவருக்கு துணையாக அணித்தலைவர் விராட் கோலி நிதானமாக விளையாடி 84(204) ரன்கள் குவித்தார். இதனையடுத்து ஆட்டத்தின் 169.4-வது பந்தில் ரவிந்திர ஜடேஜா 4(3) ரன்களில் வெளியேற இந்தியா தனது முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. ரோகித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 63(114) ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆஸி., தரப்பில் பேட் கம்மிஸ் 3 விக்கெட் குவித்தார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய ஆஸி., தொடக்க வீரர்களாக மார்கஸ் ஹரிஸ் 5*(13) மற்றும் அரோண் பின்ச் 3*(23) ஆகியோரை களமிறக்கியது. இரண்டாம் நாள் முடிவடைந்த நிலையில் ஆஸி., விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் குவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று மூன்றாவது டெஸ்ட் டின் மூன்றாவது நாள் ஆட்டம் தொடர்ந்தது. ஆட்டம் தொடங்கிய முதலே இந்திய பந்து வீச்சாளர்களின் கை ஓங்கி இருந்தது. 24, 36, 53, 89, 92 ரன்களுக்கு அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது ஆஸ்திரேலியா அணி. பும்ராவின் நேர்த்தியான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா வீரர்கள் திணறி வருகின்றனர்.
தற்போது ஆஸ்திரேலியா அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட 351 ரன்கள் பின்தங்கி உள்ளது.