புது டெல்லி: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியலை BCCI வெளியிட்டுள்ளது. இன்று நடைபெற்ற எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக் குழு ஆலோசனை கூட்டத்தில் எந்ததெந்த வீரர்களை தேர்ந்தெடுப்பது மற்றும் ஓய்வு அளிப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் ரோஹித் சர்மாவின் துணை கேப்டன் பதவி குறித்தும், தொடக்க வீரர் ஷிகர் தவானின் மோசமான ஆட்டத்தை குறித்தும் நிறைய விவாதம் நடைபெற்றது.
இறுதியாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியலை வெளியிட்டப்பட்டது. இதில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படவில்லை. காயம் காரணமாக போட்டியில் பங்கேற்காமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார்.
ALERT: #TeamIndia for the upcoming @Paytm series against West Indies announced. #INDvWI pic.twitter.com/7RJLc4MDB1
— BCCI (@BCCI) November 21, 2019
சிவம் துபே டி-20 போட்டிக்கு பிறகு ஒருநாள் அணியில் முதல் முறையகா வாய்ப்பு கிடைத்துள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி 20 இந்திய அணி:- விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷாமி குமார், வாஷிங்டன் சுந்தர்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் இந்திய அணி:- விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், மனிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் சாஹர், புவனேஷ்வர் குமார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்திய அணி மூன்று டி 20 போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
T20 போட்டி அட்டவணை:
முதல் டி-20 போட்டி: மும்பை - டிசம்பர் 6
2 வது டி-20 போட்டி: திருவனந்தபுரம் - டிசம்பர் 8
3 வது டி-20 போட்டி: ஹைதராபாத் - டிசம்பர் 11
ஒருநாள் போட்டிகள் அட்டவணை:
முதல் போட்டி: சென்னை - டிசம்பர் 15
2 வது போட்டி: விசாகப்பட்டினம் - டிசம்பர் 18
3 வது போட்டி: கட்டாக் - டிசம்பர் 22
தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே மூன்று போட்டிகளில் கொண்ட டி-20 தொடரில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. அதாவது தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்று டெஸ்ட் கொண்ட தொடரிலும், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களிலும் தலா 120 புள்ளிகளைப் பெற்ற இந்திய அணி, தற்போது வங்கதேச அணிக்கு எதிரான தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் 300 புள்ளிகளை எட்டியுள்ளது.
(புள்ளி கணக்கீடு - ஒரு தொடருக்கு 120 புள்ளிகள் என்ற கணக்கில் போட்டிகள் நடத்தப்படும். அந்த வகையில் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் ஒவ்வொரு போட்டியின் வெற்றிக்கும் 60 புள்ளிகள் சேர்க்கப்படும். 5 போட்டிகள் கொண்ட தொடரின் ஒவ்வொரு போட்டியின் வெற்றிக்கும் 24 புள்ளிகள் சேர்க்கப்படும்)
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.