விசாகப்பட்டினம்: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா (India vs South Africa) இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏ.சி.ஏ-வி.டி.சி.ஏ கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் மயங்க இருவரின் அதிரடி மற்றும் நிதானமாக ஆட்டத்தால் இருவரும் சதம் அடுத்தனர். ரோகித் 176 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்தார். 157 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். அவர் 215 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிருக்கு 502 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய கேடன் விராட் கோலி டிக்ளர் அறிவித்தார். சேதேஷ்வர் புஜாரா (6), விராட் கோலி (20), அஜின்கியா ரஹானே (15), ஹனுமா விஹாரி (10), விருத்திமான் சஹா (21) ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள். ஜடேஜா 30 ரன்னும், அஷ்வின் 1 ரன்னும் எடுத்திருந்த போது இந்திய அணி டிக்ளர் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா மூன்று விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்திருந்தது. டீன் எல்கர்* (27) மற்றும் டெம்பா பவுமா* (2) ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இந்தநிலையில், இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி நிதானமாக ஆடி அணியின் ரன்களை உயர்த்தினர். குறிப்பாக டீன் எல்கர் மற்றும் க்வின்டன் டி காக் ஆட்டத்தால் அணி சரிவில் இருந்து மீண்டது. இருவரும் சதம் அடித்தனர். டீன் எல்கர் 160 ரன்னும், டி காக் 111 ரன்னும் எடுத்து அவுட் ஆனர்கள். அதேபோல அணியின் கேடன் ஃபாஃப் டு பிளெசிஸ் (55) அரைசதம் அடுத்து அவுட் ஆனார்.
இன்றைய ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியை விட 117 ரன்கள் பின்தங்கி உள்ளது. இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், முதல் டெஸ்ட் டிராவில் முடியுமா? அல்லது வெற்றி, தோல்வியை தருமா? என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.