புதுடெல்லி: அகமதாபாதில் நாளை நடைபெறவிருக்கும் T20I போட்டியில் இங்கிலாந்து அணி, இந்திய கிரிக்கெட் அணியை எதிர்கொள்கிறது. அண்மையில் நடைபெற்று இந்தியா வெற்றிவாகை சூடிய டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார் ஹர்திக் பாண்ட்யா. நரேந்திரமோதி அரங்கில் நடைபெறவிருக்கும் வெள்ளை பந்து கிரிக்கெட் போட்டிகளிலும் தனது கடமையை ஹர்திக் பாண்ட்யா பொறுப்பாக செய்வார் என்று ரோஹித் கருதுகிறார்.
அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மார்ச் 12 ஆம் தேதி தொடங்கி இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடர் நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடரில் ஹார்டிக் பாண்ட்யா பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் கணிசமாக பங்களிப்பார் என்று இந்திய துணை கேப்டன் ரோஹித் சர்மா எதிர்பார்க்கிறார்.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் டி 20 உலகக் கோப்பை வரவிருக்கும் நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றி பெற ஹார்திக் பாண்ட்யா முக்கியமானவர் என்று நம்பப்படுகிறது. ஹார்திக்குக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு, அவர் தனது முழுத் திறமையையும் களத்தில் காட்ட தயாராகிவிட்டார் என்று ரோஹித் நம்புகிறார்.
Also Read | மாஸ்டர் பட பாடலுக்கு மாஸ் நடனம் ஆடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் சிங்கப்பெண்கள்
27 வயதான பாண்ட்யாவுக்கு 2019 அக்டோபரில் முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் ஹார்திக் இடம்பெற்றாலும், அவர் பந்து வீசவில்லை. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற ஹர்டிக் பாண்ட்யா தனது பேட்டிங்கால் இந்தியாவை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார். ஆனால் அவர் மூன்று ஒருநாள் மற்றும் பல T20 போட்டிகளில் ஒரு முறை மட்டுமே பந்து வீசினார்.
“நிச்சயமாக பாண்ட்யா அணியின் ஒருங்கிணைந்த அங்கமாக இருந்தார். அவர் தனது பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் பயிற்சி செய்து வருகிறார், தனது திறமைகளை மேலும் நுணுக்கமாக மெருகேற்றி வருகிறார். வரையறுக்கப்பட்ட தொடருக்குத் தயாராகும் வகையில் அவர் அணியுடன் இணைந்திருக்கிறார். தன்னால் முடிந்த சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார் ஹர்திக் பாண்ட்யா” என்று அணியின் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.
"அவர் மிகச் சிறப்பாக பயிற்சிகளை செய்துள்ளார், எனவே அவர் இத்தனை நாள் எதிர்பபர்த்து வந்த காலம் கனிந்துவிட்டது. களத்தில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகத் தெரிகிறது.
Also Read | ஸ்டுடியோவில் பத்திரிகையாளர் மீது உள்ளரங்கு இடிந்து விழுந்தது!
“கடந்த சில வாரங்களில் அவர் தனது பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கிற்காக கடுமையாக உழைத்தார். அவரிடமிருந்து அணி எதிர்பார்ப்பதைச் செய்ய அவர் தயாராக இருக்கிறார் என்று நம்புகிறேன். ”
“அவர் தனது பலத்தை, வலிமையாகக் கொண்டு களம் இறங்குகிறார். ஆஸ்திரேலியாவில் தொடங்கி, இந்தியாவில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் வரை சிறப்பாக செயல்பட்டார்” என்று ரோஹித் ஷர்மா கூறுகிறார்.
Also Read | எம்பெருமான் சிவனை பசுக்கள் வணங்கிய தலங்கள் எவை தெரியுமா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR