பெர்த்: நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை தொடக்க ஆட்டத்தில் வென்ற பிறகு, இன்று (திங்கள்கிழமை) பெர்த்தில் நடக்கும் மகளிர் டி 20 உலகக் கோப்பை மோதலில் பங்களாதேஷை எதிர்கொள்ளும் இந்திய அணி, அதே உத்தவேகத்துடன் தொடரும். இன்றைய பங்களாதேஷ் மற்றும் இந்தியா இடையிலான போட்டியில் பங்களாதேஷ் பெண்கள் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து பெண்கள் இந்திய அணி, முதல் போட்டி போலவே, இம்முறையும் முதலில் பேட்டிங் செய்ய உள்ளனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஐந்து போட்டிகளில், பங்களாதேஷுக்கு எதிராக இந்தியா 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
டாஸ் வென்ற பிறகு பேசிய பங்களாதேஷ் கேப்டன் சல்மா கதுன் (Salma Khatun), "நான் முதலில் பேட் செய்ய விரும்புகிறேன். இல்லை..இல்லை.. மன்னிக்கவும், நான் முதலில் பந்து வீச விரும்புகிறோன். வாம்-அப் போட்டிகளில் வெற்றியை பெற்றோம். இந்த தொடரின் இருக்கும் அணைத்து போட்டிகளும் முக்கியம். ஆசிய கோப்பையில் நாங்கள் இந்தியாவுக்கு எதிராக வென்றோம். இது எங்களுக்கு நிறைய நம்பிக்கையைத் தரும். எனவே இந்தியாவுக்கு எதிராக எங்களால் முடிந்த அளவுக்கு அழுத்தத்தை வழங்குவோம். நாங்கள் எங்கள் சிறந்த ஆட்டத்தை முன்னோக்கி வைப்போம் என்றார்.
அதேபோல பெண்கள் அணியின் இந்தியா கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (Harmanpreet Kaur ) கூறுகையில், நாங்கள் பேட் செய்ய விரும்பினோம். போர்டில் ஒரு நல்ல தொடக்கத்தை பெற்றோம். எனவே நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். முதல் ஆட்டத்தில் வெற்றி வியூகம் நன்றாக அமைந்தது. நாங்கள் வெற்றி பெற்றோம். ஆனால் இன்றைய ஆட்டத்தில் வைரஸ் காய்ச்சல் காரணமாக ஸ்மிருதி மந்தனா ஆட மாட்டார், அவருக்கு பதிலாக ரிச்சா கோஷ் விளையாட உள்ளார் என்றார்.