IND vs AUS Warm up Match: யாருக்கு எந்த இடம்? பேட்டிங் ஆர்டர் முடிவு செய்யப்படும்

இங்கிலாந்துக்கு எதிரான வார்ம்-அப் போட்டிக்கு முன்னதாக, கோலி முதல் மூன்று இடங்களை முடிவு செய்துள்ளார். அதில் கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக இன்னிங்ஸைத் தொடங்குவார்கள். கோஹ்லி மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வருவார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 19, 2021, 04:10 PM IST
IND vs AUS Warm up Match: யாருக்கு எந்த இடம்? பேட்டிங் ஆர்டர் முடிவு செய்யப்படும் title=

துபாய்: இங்கிலாந்துக்கு எதிராக பயிற்சி போட்டியில் வெற்றிபெற்று டி 20 உலகக் கோப்பைக்கான தங்கள் வீரர்களின் திறமையை உறுதி செய்துள்ள இந்திய அணி, நாளை (புதன்கிழமை) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் ஆடவுள்ளது. மேலும் அந்த போட்டியில் தங்கள் அணியின் பேட்டிங் ஆர்டரை எப்படி அமைக்கலாம் என்பதை இறுதி செய்யவுள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 24) நடைபெறும் முதல் போட்டியில் இந்தியா அணி பாகிஸ்தானுடன் மோதவுள்ளது. கேப்டனாக விராட் கோலி மற்றும் பயிற்சியாளராக ரவி சாஸ்திரிக்கு இது கடைசி தொடராகும். நேற்று (திங்கள்கிழமை) இங்கிலாந்துக்கு எதிரான வார்ம்-அப் போட்டிக்கு முன்னதாக, கோலி முதல் மூன்று இடங்களை முடிவு செய்துள்ளார். அதில் கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக இன்னிங்ஸைத் தொடங்குவார்கள். கோஹ்லி மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வருவார்.

தனக்கான இடத்தை உறுதி செய்த இஷான் கிஷன்:
இங்கிலாந்துக்கு எதிராக ஏழு விக்கெட் வித்தியாசத்தில் 70 ரன்கள் எடுத்த இளம் வீரர் இஷான் கிஷன், களத்தில் இறங்கி விளையாடும் 11 வீரர்கள் பட்டியலில் தேர்வு செய்யப்படுவதை உறுதி செய்துள்ளார். ரிஷப் பந்த் (29 நாட் அவுட்) சூர்யகுமார் யாதவுக்கு முன்பாகவே அனுப்பப்பட்டார் மற்றும் நாளை (புதன்கிழமை) நடைபெறும் 2வது பயிற்சி ஆட்டத்தில் எந்த வரிசையில் களம் இறங்குவார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ALSO READ |  நான் தோனியை சிறந்த பேட்ஸ்மேனாக பார்த்ததில்லை - ஹர்திக் பாண்டியா!

ரோஹித் விளையாடலாம்:
ரோஹித் இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பேட்டிங் செய்யவில்லை. எனவே 2வது பயிற்சி ஆட்டத்தில் தனது திறமையை முயற்சிக்க விரும்புகிறார். மேலும் இங்கிலாந்திற்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு பவுலிங் கொடுக்கப்படவில்லை. அவர் பேட்டிங் மட்டும் செய்தார். நேற்றைய ஆட்டத்தில் அவர் 12 (10) ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். இந்திய அணி நிர்வாகம் அவரை ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே களமிறக்குமா என்று பார்க்க வேண்டும்.

முதல் போட்டியில் ஆஸ்திரேலியா நியூசிலாந்தை வென்றது:
ஆஸ்திரேலியா முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது. டேவிட் வார்னரின் மோசமான ஃபார்ம், ஐபிஎல் -க்குப் பிறகும் இங்கே தொடர்ந்தது. முதல் பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார்.

ஆடம் ஜாம்பா மற்றும் கேன் ரிச்சர்ட்சன் சிறப்பாக பந்து வீசினார்கள். ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தோல்வியடைந்தனர். ஆஷ்டன் அகர் மற்றும் மிட்செல் ஸ்டார்க் இறுதியாக அதிரடியான இன்னிங்ஸை விளையாடி அணிக்கு வெற்றியை அளித்தனர்.

ALSO READ |  இலவசமாக T20 World Cup Live பார்க்க வேண்டுமா, இதை செய்யுங்கள்

அணிகள் விவரம்:
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஸ்வின், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர்.

ஆஸ்திரேலியா: ஆரோன் பின்ச் (இ), ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்லிஸ், மிட்செல் ஸ்டார்க், க்ளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்வீப்சன், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா.

ALSO READ |  தவானின் பேட்டிங் ஸ்டைலை நையாண்டி செய்த கேப்டன் விராட் கோலி -வீடியோ வைரல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News