IND vs AUS 2020: SENA நாடுகளில் T20 தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் விராட் கோலி

SENA நாடுகளில் T20 தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் விராட் கோலி என்ற சாதனையை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவத் டி20 போட்டியில் பதிவு செய்துள்ளார் 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 7, 2020, 09:00 AM IST
IND vs AUS 2020: SENA நாடுகளில் T20 தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் விராட் கோலி title=

ஆஸ்திரேலியாவில் பெற்ற தொடர் வெற்றியின் மூலம், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா - SENA நாடுகளில் T20 போட்டித் தொடரை வென்ற சாதனையை கோஹ்லி பதிவு செய்தார்.

ஞாயிற்றுக்கிழமையன்று சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது T20 சர்வதேச போட்டியில் ஷிகர் தவான் (Shikhar Dhawan) அரைசதம் அடித்தார், ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya) ஆட்டமிழக்காமல் 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து இந்தியாவை 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார். இதனால், மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெறுகிறது.

இதன் மூலம், ஆஸ்திரேலியா (2020), இங்கிலாந்து (2018), நியூசிலாந்து (2020), தென்னாப்பிரிக்கா (2018) என அனைத்து சேனா நாடுகளிலும் T20 தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை கோஹ்லி (Virat Kohli) பெற்றார். இரண்டாவது T20 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றியானது, கிரிக்கெட்டின் குறுகிய வடிவத்தில் இந்தியா பெற்ற 10வது தொடர் வெற்றிக்கு வழிகோலியது.   

Also Read | Ind vs Aus: T20 தொடரின் 2வது போட்டியில் இந்தியா வெற்றி

கோஹ்லியின் தலைமையின் கீழ், இந்தியா 2020 ஆம் ஆண்டில் இலங்கையை (Srilanka) 2-0 என்ற கணக்கில் வென்றது, அதைத் தொடர்ந்து நியூசிலாந்தை (New Zealand) 5-0 என்ற கணக்கில் தோற்கடித்தது. T20 போட்டிகளில் தங்கள் அற்புதமான ஆட்டத்தை அடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளை வென்ற இந்திய கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

சுவாரஸ்யமான விஷயமாக, 2016 ஆம் ஆண்டில் சர்வதேச T20-இல் இந்தியாவின் வெற்றி சதவீதம் 71.66 ஆக இருந்தது. இது உலக அணிகள் அனைத்தும் பதிவு செய்த வெற்றி வீதத்தை விட மிகவும் அதிகமானது. மொத்தம் 60 போட்டிகளில் 43 வெற்றிகளை இந்தியா (India) பதிவு செய்துள்ளது. இந்த காலகட்டத்தில் ஆஸ்திரேலியா (2020), இங்கிலாந்து (2018), நியூசிலாந்து (2020), தென்னாப்பிரிக்கா (2018), மேற்கிந்திய தீவுகள் (2019), இலங்கை (2017), ஜிம்பாப்வே (2016) மற்றும் அயர்லாந்து (2018) ஆகிய நாடுகளுக்கு எதிரான போட்டித் தொடரை இந்தியா வென்றுள்ளது .

ஞாயிற்றுக்கிழமையன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், 195 ரன்கள் இலக்கை நோக்கி பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணி, இரண்டு பந்துகள் மீதமுள்ள நிலையில், ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி 20 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த ரன் சேஸ் இதுவாகும். 2013 ஆம் ஆண்டில் ராஜ்கோட்டில் 202 மற்றும் 2016 இல் SCG-இல் 198 ரன்களை இலக்காக கொண்டு பேட்டிங் செய்து  இந்தியா வெற்றிப் பெற்றுள்ளது.

Also Read | IND vs AUS T20: இரண்டு அணிகளுக்கும் ஏற்பட்ட பெரிய பின்னடைவு!! நடந்தது என்ன?

அதுமட்டுமல்ல, டி 20 கிரிக்கெட் போட்டிகளில் கோஹ்லியின் தலைமையில் களம் இறங்கிய இந்திய அணி 190-க்கும் மேற்பட்ட இலக்கைத் இதுவரை ஏழு முறை வென்றுள்ளது.  

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News