ஷமி குறித்து பொய்யான தகவலை சொன்ன ரோஹித்? உச்சகட்ட கோபத்தில் ஷமி?

Mohammed Shami: முகமது ஷமி மற்றும் ரோஹித் ஷர்மா இடையே சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நியூசிலாந்து தொடரின் போது ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Written by - RK Spark | Last Updated : Dec 10, 2024, 08:12 AM IST
  • ஆஸ்திரேலியா தொடரில் ஷமி விளையாடுவாரா?
  • காயத்தில் இருந்து மீண்டு வருகிறார் ஷமி.
  • பிசிசிஐ இறுதி முடிவு எடுக்க உள்ளது.
ஷமி குறித்து பொய்யான தகவலை சொன்ன ரோஹித்? உச்சகட்ட கோபத்தில் ஷமி? title=

இந்திய அணியில் முகமது ஷமி மீண்டும் எப்போது விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காயத்தால் அவதிப்பட்டு வந்த ஷமி மீண்டும் அணியில் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல் வெளியாகி வருகிறது. நியூஸிலாந்து டெஸ்டில் ஷமி இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர் விளையாடவில்லை. அதனை தொடர்ந்து ரஞ்சியில் பெங்கால் அணிக்காக விளையாடினார். கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் இந்த ஆண்டு ஷமி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதன் காரணமாக ஐபிஎல் 2024 மற்றும் டி20 உலக கோப்பையில் பங்கேற்கவில்லை. கடைசியாக 2023 ஒருநாள் நாள் உலக கோப்பையில் விளையாடினார்.

மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவின் ஸ்காட் போலண்ட் ஐபிஎல் 2025ல் விளையாடுகிறாரா?

அதன் பிறகு கடந்த மாதம் தான் மீண்டும் பந்துவீச தொடங்கினார். ரஞ்சி டிராபியில் மத்தியப் பிரதேசத்திற்கு எதிராக 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதனை தொடர்ந்து, தற்போது சையத் முஷ்டாக் அலி டிராபியில் சிறப்பாக பந்துவீசி வருகிறார். 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் முகமது ஷமி பற்றி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ரோஹித், "அவருக்காக கதவுகள் எப்போதும் திறந்திருக்கிறது. நாங்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். சையத் முஷ்டாக் அலி டிராபியில் விளையாடும் போது, ​​அவரது முழங்காலில் சிறிது வீக்கம் ஏற்பட்டுள்ளது.

இது அவர் டெஸ்ட் போட்டியில் வந்து விளையாடுவதற்குத் தடையாக இருந்தது, நாங்கள் மிகவும் கவனமாக இருக்க விரும்புகிறோம், அவரை அவசரப்படுத்தி இங்கே கொண்டு வந்து காயம் பெரியதாக மாற விரும்பவில்லை. ஷமி 100 சதவீதம் குணமடைய காத்திருக்கிறோம். காயத்தில் இருந்து மீண்டு வரும் அவரை இங்கே கூட்டி வந்து அதிக பணிச்சுமை கொடுத்து, அவருக்கு அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. மருத்துவக்குழு தொடர்ந்து அவரை கண்காணித்து வருகின்றனர். இந்திய அணியின் செயல்பாட்டையும் அவர் கவனித்து வருகிறார். முழுவதுமாக குணமடைந்த பிறகு அவர் எப்போது வேண்டுமானாலும் வந்து விளையாடலாம்" என்று ரோஹித் தெரிவித்தார்.

ரோஹித் - ஷாமி இடையே பிரச்சனை?

இருப்பினும், ரோஹித் மற்றும் ஷமிக்கு இடையே சில வார்த்தை மோதல்கள் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் இந்தியாவில் பெங்களூருவில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது, ஷமிக்கு முழங்காலில் வீக்கம் இருப்பதாக ரோஹித் தெரிவித்தார். நியூசிலாந்து தொடர் ஆரம்பிக்கும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித் சர்மா, "இந்த தொடர் அல்லது ஆஸ்திரேலிய தொடரில் ஷமி முழு உடற்தகுதியை பெறுவாரா என்பதை சொல்ல முடியாது. அது மிகவும் கடினமான ஒன்று. ஷமிக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. அவரது முழங்காலில் வீக்கம் ஏற்பட்டது, இது மிகவும் அசாதாரணமானது. அவர் குணமடைந்து வருகிறார்" என்று தெரிவித்து இருந்தார்.

ஆனால் அந்த சமயத்தில் ஷமி முழு உடற்தகுதியுடன் இருந்ததாகவும், விளையாட தயாராக இருந்ததாகவும் ரோஹித்திடம் தெரிவித்துள்ளார். ஆனால் இதனை ரோஹித் கண்டுகொள்ளாததால் இந்த பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் முடிந்த பிறகு ரோஹித் மற்றும் ஷமி இருவரும் மீண்டும் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது மீண்டும் காரசார விவாதம் நடைபெற்றதாக தற்போது தகவல் வெளியாகி வருகிறது.

ஆஸ்திரேலியா தொடரில் ஷமி விளையாடுவாரா?

பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஷமி இணைவது குறித்து இன்னும் பிசிசிஐ எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஷமிக்கு ஆஸ்திரேலியா செல்லும் வாய்ப்பு அதிகம் இருந்தாலும், தற்போது அவர் SMATல் பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார். பிசிசிஐ இன்னும் அவருக்கு அனுமதி வழங்கவில்லை. NCAயிடமிருந்து ஒரு இறுதி அனுமதிக்காக அனைவரும் காத்துள்ளனர். ஒருவேளை ஷமி ஆஸ்திரேலியா வந்தாலும் 3வது டெஸ்டில் விளையாடுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும், 4வது மற்றும் 5வது டெஸ்டில் விளையாட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | Jasprit Bumrah: பும்ராவின் முதல் சர்வதேச விக்கெட் யாருடையது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News