இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

Last Updated : Feb 23, 2017, 08:47 AM IST
இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் title=

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் இந்தத் தொடர், கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளிடையே இதுவரை நடந்துள்ள 90 டெஸ்ட் போட்டிகளில், ஆஸ்திரேலியா 40 வெற்றிகளையும், இந்தியா 24 வெற்றிகளையும் பெற்றுள்ளன. 25 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. இன்றைய போட்டி விருவிருப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேதி: 23-27 பிப்ரவரி

நேரம்: காலை 8:30 தொடங்குகிறது

இடம்: மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம், புனே

Trending News