புனேயில் நடந்த முதல் டெஸ்ட் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டு இழப்புக்கு 256 ரன்கள் எடுத்துள்ளது
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் புனேயில் இன்று தொடங்கியது. புனேயில் முதல் டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டதால், இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளை நடத்தும் 25-வது மைதானம் என்ற பெருமை பெற்றது.
ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் இந்தத் தொடர், கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. மேத்யூ
ரென்ஷா மற்றும் டேவிட் வார்னர் தொடக்க வீரராக களம் இறங்கினார்கள். டேவிட் வார்னர் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் ஃபோல்ட் ஆனார்.
அடுத்து ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் ஆட வந்தார். இவர் பொறுமையாக ஆட்டத்தை தொடங்கினார். ஆனால் இவர் 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். பிறகு வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஆனால் மறுமுனையில் நிதானமாக நின்று ஆடிய மேத்யூ ரென்ஷா 68 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் முரளி விஜயிடம் கேட்ச் அவுட் ஆனார். ஆனால் மிட்செல் ஸ்டார்க் அதிரடியாக விளையாடி 57 ரன்கள் சேர்த்துள்ளார். இவர் களத்தில் உள்ளார். உமேஷ் யாதவ் முதல் நாளில் 4 விக்கெட் எடுத்தார். அஸ்வின் மற்றும் ஜடேஜா தல 2 விக்கெட் கைப்பற்றினர்.
At Stumps on Day 1 of the 1st Test, Australia are 256/9 (Renshaw 68, Starc 57*) #INDvAUS pic.twitter.com/9ESeLLp61d
— BCCI (@BCCI) February 23, 2017