Dream11 அணி கணிப்பு: இந்தியா (IND) vs ஆப்கானிஸ்தான் (AFG) இன்று மோதுகின்றன. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான T20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்று போட்டி இன்று அபுதாபியில் நடைபெறுகிறது. உலகக் கோப்பை தொடரின் முதல் வெற்றியை நோக்கி இந்திய அணி இன்று களம் இறங்குகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, அரையிறுதிப் பந்தயத்தில் நிலைத்திருக்க வேண்டுமானால், ஆப்கானிஸ்தானை மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். இது எளிதான காரியமாக இருக்காது.
ஏனென்றால், ஆப்கானிஸ்தானைப் பற்றி பார்த்தால், முகமது நபியின் தலைமையில், அந்த அணி 3 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று, அற்புதமாக செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராகவும், அந்த அணி வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை நெருங்கியது. ஆனால் ஒரே ஓவரில் கதை மாறியது.
இத்தகைய சூழ்நிலையில் இரு அணிகளும் இன்று அரையிறுதிக்கு முன்னேற கடுமையாக முயற்சிப்பதை காணமுடியும். அபுதாபியில் மிக முக்கியமான விவாதம் இந்திய அணியில் விளையாடும் 11 பேர் கொண்ட லெவன் அணியில் யார் இடம் பெறுவார்கள் என்பதே.
முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த விராட் அணி மோசமான அணி சேர்க்கையால் விமர்சனத்துக்குள்ளானது. அத்தகைய சூழ்நிலையில், அவர் சிறந்த அணி கலவையை உருவாக்கி வெற்றியைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம். இதனால் அவர் குறைந்தபட்சம் தனது நம்பகத்தன்மையைக் காப்பாற்ற முடியும்.
ALSO READ | இஷான் கிஷன் ஓப்பனிங் பேஸ்மேனாக களமிறங்கியதற்கான காரணம்!
11 பேர் கொண்ட அணியில் மாற்றம் வருமா?
இந்த போட்டி இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கும் முக்கியமானது. இந்திய அணி கடந்த போட்டியில் ரோஹித் ஷர்மாவின் இடத்தை மாற்றியது. ஆனாலும் இந்திய அணி எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. அத்தகைய சூழ்நிலையில், ரோஹித் சர்மா மீண்டும் இன்றைய போட்டியில் ஓப்பனிங் செய்வதைக் காணலாம். அதே நேரத்தில் கேஎல் ராகுல் நம்பர்-4 இல் இறங்க முடியும். முதுகுவலி காரணமாக கடந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் பங்கேற்கவில்லை. காயத்தில் இருந்து அவர் குணமடைந்தாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
மறுபுறம், நாம் ஆப்கானிஸ்தானைப் பற்றி பேசினால், அதற்கு அஸ்கர் ஆப்கானுக்கு ஒரு வலுவான மாற்று தேவைப்படும். உஸ்மான் கனி அல்லது ஹஷ்மத்துல்லா ஷாஹிதிக்கு வாய்ப்பு கிடைக்கும்.
மைதானம் மற்றும் வானிலை:
இந்த டி20 உலகக் கோப்பையில் 9 ஆட்டங்கள் அபுதாபியில் நடந்துள்ளன. அதில் 6 ஆட்டங்களில் சேஸிங் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. புதன் கிழமை வானம் மிகவும் தெளிவாக இருக்கும் மற்றும் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அபுதாபியில், டாஸ் வென்ற பிறகு, அணி முதலில் பீல்டிங்கைத் தீர்மானிக்கும்.
ALSO READ | இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு உள்ளதா?
இரு அணிகளிலும் இந்த வீரர்கள் விளையாடலாம் (கணிப்பு)
இந்திய அணியில் இந்த 11 பேர் களம் இறங்கலாம்:
ரோஹித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி (கேப்டன்), கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.
ஆப்கானிஸ்தானில் இந்த 11 பேர் களம் இறங்கலாம்:
ஹஸ்ரத்துல்லா ஜசாய், முகமது ஷாஜாத், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி/உஸ்மான் கானி, முஹம்மது நபி, நஜிபுல்லா சத்ரான், குலாப்தீன் நைப், ரஷித் கான், கரீம் ஜனத்/முஜிப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக் மற்றும் ஹமீத் ஹசன்.
ALSO READ | ஐபிஎல் ஆட்டத்தை மட்டும் வைத்து வீரர்களை தேர்வு செய்தது தவறா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR