India National Cricket Team: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி (IND vs AFG 3rd T20) இன்று நடைபெற இருக்கிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இந்திய அணி வென்று, தொடரை வைட்வாஷ் செய்யும் முனைப்போடு எதிர்கொள்கிறது. ஆப்கானிஸ்தான் அணி (Team Afghanistan) பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சற்று முன்னேற்றம் காண வேண்டும் என்றாலும் அந்த அணியும் இந்த போட்டியை வென்று ஆறுதல் வெற்றியை தேட முனைப்பு காட்டும்.
IND vs AFG: இன்று முக்கிய போட்டி
இந்திய அணி (Team India) தொடரை வென்றாலும் இது முக்கியமான போட்டியாகதான் பார்க்கப்படும். வரும் ஜூன் மாதம் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் இந்தியா விளையாடும் கடைசி சர்வதேச டி20 போட்டி இதுவாகும். இதன்பின் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரும், ஐபிஎல் தொடரும் நடைபெறும். எனவே, டி20 உலகக் கோப்பை அணிக்கு எந்த வீரர்களை தேர்வு செய்வது என்பதை தீர்மானிக்க, ஐபிஎல் தொடர் ஒரு முக்கிய காரணியாக இருக்கும் என்றாலும் இந்த போட்டியும் சற்று முக்கியமானதுதான்.
இந்த தொடரில் சுழற்பந்துவீச்சில் குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உள்ள நிலையில், இவர்களில் யாரை எப்படி பயன்படுத்துவது என்பது இந்திய அணிக்கு சவாலாக இருக்கும். கூடவே, ஜடேஜாவும் அணிக்கு உள்ளே வந்தால் அணியின் முக்கிய சுழற்பந்துவீச்சாளர் யார் என்பதை இந்திய அணியும் உறுதி செய்ய வேண்டிய நிலை உள்ளது. தூபே அல்லது ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஒருவர் நிச்சயம் அணியில் இருப்பார் எனும் போது, இரண்டு பிரதான வேகப்பந்துவீச்சாளர்களுடன் போவதா அல்லது மூன்று வேகப்பந்துவீச்சாளர்களுடன் போவதா என்பதை இந்திய அணி முடிவு செய்தாக வேண்டும்.
மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியாவிற்கு நோ! டி20 அணியில் ஷிவம் துபே! பிசிசிஐ அதிரடி!
IND vs AFG: விக்கெட் கீப்பரிலும் பிரச்னை
இதேபோல் பேட்டிங் ஆர்டரிலும் ஒரு தெளிவின்மையே தற்போது தென்படும் சூழலில், விக்கெட் கீப்பிங் பேட்டரை தேடுந்தெடுப்பதும் தற்போது கடினம்தான். இந்திய அணியின் தேர்வாக தற்போது ஜித்தேஷ் சர்மாதான் (Jitesh Sharma) உள்ளார். கடைசி கட்ட ஓவர்களில் அதிரடியாக ரன்களை குவிப்பது, விக்கெட் கீப்பிங்கிலும் மிரட்டுவது என இரண்டையும் அவர் கச்சிதமாக செய்து வருகிறார். இஷான் கிஷன் சில காலம் ஓய்வில் இருந்து வரும் சூழலில் ஜித்தேஷ் சர்மா அதனை சரியாக பயன்படுத்திக்கொள்கிறார் எனலாம். zeenews.india.com/tamil/sports/ind-vs-afg-jithesh-sharma-out-sanju-samson-in-team-india-playing-11-for-3rd-t20-483631
மறுமுனையில் இந்த தொடரில் சஞ்சு சாம்சன் (Sanju Samson) சேர்க்கப்பட்டார், ஆனால் முதலிரண்டு போட்டிகளின் பிளேயிங் லெவனிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. ஜித்தேஷ் சர்மாவை உட்காரவைத்தால்தான் சஞ்சு சாம்சனை களமிறக்க முடியும். ஆனால், ஒரு நீண்ட நாள் திட்டத்தை மனதில் வைத்து பிசிசிஐ ஜித்தேஷ் சர்மாவை விக்கெட் கீப்பிங் பேட்டராக வளர்த்தெடுக்கிறது என தெரிகிறது. அந்த வகையில், கடந்த இரண்டாவது டி20 போட்டியில் ஜித்தேஷ் டக்அவுட்டானதை அடுத்து, இந்த போட்டிக்கு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என கருத்துகள் வெளியாகின.
IND vs AFG: மூன்று வாய்ப்புகள்
சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்றாலும் ஜித்தேஷை ஒரு போட்டியில் டக்அவுட்டானதை வைத்து அடுத்த போட்டிக்கு சேர்க்காமல் இருப்பது சரியாக இருக்காது என்பது பலரின் கருத்தாக உள்ளது. அதில், இந்திய மூத்த வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில்,"ஜிதேஷ் அல்லது சஞ்சுவை நம்பர் 6ல் வைத்திருக்க வேண்டுமா என்பதுதான் கேள்வி. ஜிதேஷ் தனது இடத்தை முழுவதுமாக உறுதிப்படுத்தியிருந்தால், ஜிதேஷ் பெயருக்கு முன்னால் ஒரு கேள்விக்குறியே இல்லாமல் இருந்திருந்தால், அவர் நிச்சயமாக உலகக் கோப்பைக்கு தேர்வு ஆவார் எனலாம். நீங்கள் சஞ்சுவைப் பற்றி யோசித்திருக்கலாம். இருப்பினும், ஜிதேஷ் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அதற்கும் ஒரு மறுபக்கம் உள்ளது. நீங்கள் சஞ்சு விளையாடுகிறீர்கள் என்று வைத்துக் கொண்டால், ஒரு போட்டியில் அவரை (ஜித்தேஷ்) மதிப்பிடுவீர்களா? இது தவறானது. நீங்கள் யாராக இருந்தாலும், அவருக்கு மூன்று வாய்ப்புகளையாவது கொடுங்கள். சஞ்சுவின் கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் இதுதான் நடந்தது" என்றார்.
IND vs AFG: பேட்டிங் ஆர்டரில் மாற்றமா...?
மேலும் ஆகாஷ் சர்மா கூறுகையில், ரோஹித் சர்மா (Rohit Sharma) இரண்டு போட்டியிலும் ரன்களை திரட்டவில்லை, எனவே அவர் இந்த போட்டியில் விளையாடி ஆக வேண்டும். விராட் கோலி (Virat Kohli) மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் ஒரு போட்டியில்தான் விளையாடி உள்ளனர். எனவே அவர்களும் விளையாடியாக வேண்டும். இந்த தொடரின் ஆகச் சிறந்த வீரராக ஷிவம் தூபே (Shivam Dube) உள்ளார், அவரும் நிச்சயம் நம்பர் 4இல் விளையாடுவார். அப்போது எங்கே திலக் வர்மா விளையாடுவார், ஐந்தாவது இடத்திலேயா...? ஆனால், அங்கு ரின்கு சிங் விளையாடி வருகிறார். பெரிய அளவில் ரன்களை அடிக்கும் வாய்ப்பு இல்லை என்றாலும் அவரும் தொடர்ந்து விளையாட வேண்டும் கட்டாயத்தில் உள்ளார் என்றார். சஞ்சுவா அல்லது ஜித்தேஷா என்பது இன்று தெரிந்துவிடும்.
மேலும் படிக்க | கிரிக்கெட் நட்சத்திரங்களை வாரி வழங்கிய U19 உலகக் கோப்பை 2014... யார் யார் தெரியுமா?
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ