ஜனவரி 11-ம் தேதி தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20ஐ தொடருக்கான அணியை பிசிசிஐ கடைசி நிமிடத்தில் அறிவித்துள்ளது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியதால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். இளம் விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷான் அணியில் இல்லாததால் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். பிசிசிஐயின் இந்த தேர்வு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்த போதிலும் இஷான் கிஷானை பிசிசிஐ ஓரம் கட்டுவதாக ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். இருப்பினும், வெளியான தகவலின் படி கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோருடன் சேர்த்து இஷானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இஷான் கிஷானைப் பொறுத்தவரை, தென் ஆப்பிரிக்கா தொடருக்கான டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். அவர் மன சோர்வு காரணமாக அந்த முடிவை எடுத்தார் என்றும், கிரிக்கெட்டில் இருந்து சிறிது இடைவெளி தேவை என்றும் முடிவு எடுத்துள்ளார். மேலும் பிசிசிஐ அவரை டி20 அணியில் இருந்து நீக்கவில்லை. கடந்த ஜனவரி 2023 முதல், இஷான் கிஷான் அனைத்து தொடர்களிலும் இந்திய அணியின் ஒரு வீரராக விளையாடி வருகிறார். ஆனாலும் அணியில் அவருக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஜனவரி தொடக்கத்தில் மூன்று டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட இலங்கை தொடருடன் பயணம் தொடங்கியது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் அடுத்தடுத்த தொடர்கள், 50-ஓவர் உலகக் கோப்பை என அணியில் இடம் பெற்ற போதிலும், ஷுப்மான் கில் மற்றும் கே.எல். ராகுலின் வருகை காரணமாக இஷானுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இருப்பினும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் தனது திறமையை வெளிப்படுத்திய கிஷன், இரண்டு அரை சதங்களை விளாசினார். அடுத்ததாக தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்தாலும் விளையாடும் அணியில் இடம் பெறவில்லை. பின்பு தனது மன மற்றும் உடல் நலனைக் காரணம் காட்டி, தற்காலிகமாக அணியில் இருந்து விலகி உள்ளார். இந்த தொடரில் சஞ்சு சாம்சன் மற்றும் ஜிதேஷ் ஷர்மா ஆகியோர் விக்கெட் கீப்பர்களாக இடம்பெற்றுள்ளனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக விலகி உள்ளனர். கைவிரல் காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம் பெற வில்லை. மேலும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What do you all make of this power-packed T20I squad set to face Afghanistan? #TeamIndia | #INDvAFG | @IDFCFIRSTBank pic.twitter.com/pY2cUPdpHy
— BCCI (@BCCI) January 7, 2024
இந்திய அணி: ரோஹித் சர்மா, எஸ் கில், ஒய் ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (wk), சஞ்சு சாம்சன் (wk), ஷிவம் துபே, டபிள்யூ.சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ் , அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார்
மேலும் படிக்க | Team India: இந்தியா இன்னும் வெற்றிபெறாத 6 டெஸ்ட் மைதானங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ