உலக கோப்பை டி20 சூப்பர் 12 அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 22 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. பகல் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியும், பங்களாதேஷ் அணியும் மோதுகின்றன. மாலை 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ALSO READ சூப்பர் 12: 9 போட்டிகளில் 8 முறை வென்ற சேஸிங் அணி! காரணம் என்ன?
குரூப் Aயில் கடைசி இரண்டு இடத்தில் உள்ள அணிகளும், குரூப் Bயில் முதல் இரண்டு இடத்தில் உள்ள அணிகளும் மோதுவதால் இன்றைய போட்டி சுவாரஸ்யமாகவே அமைந்துள்ளது. மேற்கு இந்திய தீவுகள் அணி கடைசியாக ஆடிய இங்கிலாந்து மற்றும் சவுத் ஆப்ரிக்கா அணிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. 11பேறும் ஆல் ரவுண்டர் என்று சொல்லிக்கொண்ட மேற்கு இந்திய தீவுகள் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பங்களாதேஷ் அணியும் கடந்த 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளதால் இன்று வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை பற்றி யோசிக்க முடியும்.
மறுபுறம் இந்தியா, நியூஸிலாந்து போன்ற பலமான அணிகளை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது பாகிஸ்தான் அணி. பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆர்டர் மிகவும் பலம் வாய்ந்ததாக இருப்பதால் எதிரணியின் பவுலிங்கை அசால்டாக கையாண்டு வருகின்றன. ஆப்கானிஸ்தான் அணியும் ஸ்காட்லான்ட் அணியை 130 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரன் ரேட்டை +6.5 என்ற யாரும் தொட முடியாத இடத்தில் வைத்துள்ளது. சூப்பர் 12 போட்டியில் முதல் பேட்டிங் பிடித்து வெற்றி பெற்ற ஒரே அணியும் ஆப்கானிஸ்தான் தான். அதனால் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
மேற்கு இந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பீல்டிங் தேர்வு செய்துள்ளது.
ALSO READ இந்தியா - நியூசிலாந்து போட்டியில் களம் இறங்குவாரா ஹர்திக் பாண்டியா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR