ICC T20 World Cup : நடப்பு சாம்பியனுக்கு வந்த சோதனை... வெளியேறுகிறதா ஆஸ்திரேலியா!

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 142 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Nov 5, 2022, 03:38 PM IST
  • இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால், ஆஸ்திரேலியா வெளியேற வாய்ப்புள்ளது.
  • இங்கிலாந்து அணி நல்ல ரன்ரேட்டை தக்கவைத்துள்ளது.
  • நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது.
ICC T20 World Cup : நடப்பு சாம்பியனுக்கு வந்த சோதனை... வெளியேறுகிறதா ஆஸ்திரேலியா! title=

ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று நாளையுடன் நிறைவடைய உள்ளது. மேலும், நவ. 9, 10ஆம் தேதிகளில் அரையிறுதிப்போட்டியும், நவ. 13ஆம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெற உள்ளது. 

இந்நிலையில், போட்டியின் டாஸை வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்ப ஓவர்களில் அதிரடி காட்டி வந்த இலங்கை, மிடில் ஓவர்களில் சற்று சுணக்கம் காட்டியது. மேலும், டெத் ஓவர்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க, அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களையே எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக, தொடக்க வீரர் பதும் நிசங்கா 67 ரன்களை குவித்து ஆறுதல் அளித்தார். 

மேலும் படிக்க | வங்கதேச வீரர்கள் உணவருந்தியபோது விராட் கோலி கொடுத்த அதிர்ச்சி!

இங்கிலாந்து பந்துவீச்சு சார்பில் மார்க் வுட் 3 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், சாம் கரன், அடில் ரஷித் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து, 142 ரன்கள் இந்த போட்டியை வென்றது மட்டுமின்றி, அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பும் இங்கிலாந்து அணிக்கு அதிகமாகியுள்ளது.  

முதல் பிரிவில் நியூசிலாந்து அணி மட்டுமே உறுதியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளின் எந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்கிறது என்பது இன்றைய போட்டியின் முடிவில்தான் உள்ளது. ஆஸ்திரேலியா 7 புள்ளிகளுடன் இருந்தாலும் ரன்ரேட் குறைவாக உள்ளது. 

ஏற்கெனவே, நல்ல ரன்ரேட்டை வைத்துள்ள இங்கிலாந்து இந்த போட்டியை வெல்லும்பட்சத்தில் ஆஸ்திரேலிய அணி சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறும். நடப்பு சாம்பியனும், போட்டியை நடத்தும் நாடுமான ஆஸ்திரேலியா வெளியேறினால் தொடரில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். 

மேலும் படிக்க | 20 ஓவர் உலக கோப்பையில் தொடரும் நடுவர்களின் மோசமான முடிவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News