ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட்... ஐசிசியின் புதிய பரிந்துரை

Cricket In Olympics: வரும் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகளை சேர்க்க ஐசிசி புதிய பரிந்துரை ஒன்றை செய்துள்ளது. அதுகுறித்து, சர்வதேச ஒலிம்பிக் குழு முடிவெடுக்கும்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 22, 2023, 09:19 AM IST
  • ஐசிசியின் ஒலிம்பிக் பணிக்குழுவில் ஜெய் ஷா சேர்ப்பு.
  • 2036இல் ஒலிம்பிக் தொடரை நடத்த இந்திய திட்டம்.
ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட்... ஐசிசியின் புதிய பரிந்துரை title=

Cricket In Olympics: கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும்  என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் நீண்டநாள் ஆசையும், கோரிக்கையுமாக இருந்து வருகிறது. கிரிக்கெட் பல்வேறு முன்னணி நாடுகளால் விளையாடப்பட்டாலும், மற்ற விளையாட்டுகள் உடன் ஒப்பிட்டால் மிக குறைந்த நாடுகளே கிரிக்கெட் விளையாடுகின்றன. இருப்பினும், கிரிக்கெட்டின் வீச்சு அதிகம் என்பதால் அதனை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்க பல்வேறு கட்டத்தில் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐசிசி) ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை சேர்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபடுகிறது. ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் போட்டிகளை 2028இல் அமெரிக்காவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இணைக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்த ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ள நிலையில், அதன் ஒருங்கிணைப்பாளர்கள் அத்தொடரில் சேர்க்கப்பட உள்ள புது விளையாட்டுகள் குறித்த பரிந்துரை பட்டியலை வரும் மார்ச் மாதத்திற்குள் இறுதி செய்ய வேண்டும். மேலும், இதனை சர்வதேச ஒலிம்பிக் குழு உறுதி செய்யும் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | Ind vs NZ: நான் பார்மில் இல்லையா? ரோஹித் சர்மா குடுத்த விளக்கம்!

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் ஆலோசனை கூட்டம் மும்பையில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் என்றும் அதில்தான், கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் இணைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐசிசியின் தலைவர் கிரெக் பார்க்லே தலைமையிலான ஐசிசியின் ஒலிம்பிக் பணிக்குழுவில் பிசிசிஐ செயலர் ஜெய் ஷா சமீபத்தில் சேர்க்கப்பட்டார். இதில் இந்திரா நூயி (சுயாதீன இயக்குநர்), பராக் மராத்தே (முன்னாள் அமெரிக்க கிரிக்கெட் தலைவர்) ஆகியோர் உள்ளனர். 

2036இல் ஒலிம்பிக்கை நடத்தும் இந்தியாவின் லட்சியத்தை மனதில் வைத்து ஜெய் ஷா சேர்க்கப்பட்டார்.
மேலும் ஐசிசியில் ஜெய் ஷாவின் ஈடுபாடு, விளையாட்டின் மிகப்பெரிய உலகளாவிய நிகழ்வான ஒலிம்பிக்கில், கிரிக்கெட் சேர்க்கப்படுவதற்காகு சர்வதேச ஒலிம்பிக் குழு உடனான அதன் பேச்சுவார்த்தைகளில் முக்கியமான மற்றும் செல்வாக்குமிக்க உந்துதலை அளிக்கும் என்று நம்பப்படுகிறது. 

அவர்களின் ஒலிம்பிக் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இருக்கும் செலவு குறைந்த ஒலிம்பிக்கை உறுதி செய்வதற்காக ஆறு அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிக்கான முன்மொழிவு ஐசிசியால் செய்யப்பட்டது. அதாவது ஆறு அணிகள் மட்டும் பங்கேற்கும் டி20 போட்டிகள் ஆண்கள், பெண்கள் பிரிவாக விளையாடப்படும். 

பேஸ்பால்/சாப்ட்பால், ஃபிளாக் ஃபுட்பால், லாக்ரோஸ், பிரேக் டான்ஸ், கராத்தே, கிக்பாக்சிங், ஸ்குவாஷ் மற்றும் மோட்டார்ஸ்போர்ட் ஆகிய எட்டு விளையாட்டுகளுடன் கிரிக்கெட்டும் அமெரிக்க ஒலிம்பிக் பரிந்துரை பட்டியலை தயாராக உள்ளது. 

மேலும் படிக்க | நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா; கெத்தாக 7வது தொடரை கைப்பற்றி சாதனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News