RCB vs SRH: மீண்டும் சாதனைகளை படைத்த சன்ரைசர்ஸ்... 287 ரன்கள் குவிப்பு - பொசுங்கியது ஆர்சிபி!

RCB vs SRH: ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 286 ரன்களை குவித்தது

Written by - Sudharsan G | Last Updated : Apr 15, 2024, 09:49 PM IST
  • டிராவிஸ் ஹெட் 102 ரன்களை குவித்தார்.
  • கிளாசென் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
  • ஆர்சபி வெற்றி பெற ஒரே ஓவருக்கு சுமார் 15 ரன்கள் தேவை.
RCB vs SRH: மீண்டும் சாதனைகளை படைத்த சன்ரைசர்ஸ்... 287 ரன்கள் குவிப்பு - பொசுங்கியது ஆர்சிபி! title=

RCB vs SRH Highlights: நடப்பு 17ஆவது ஐபிஎல் சீசனின் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பாகவும், பரபரப்புடனும் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் நடப்பு தொடரின் 30வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று மோதியது.

முன்னர் கூறியது போலவே இன்றைய போட்டியும் மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்றது. ஐபிஎல் தொடரின் வரலாற்றிலேயே ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்களை எடுத்த அணி சன்ரைசர்ஸ் அணிதான். சில நாள்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 277 ரன்களை குவித்து அந்த சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, தனது அதே சாதனையை இன்று முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது. 

சன்ரைசர்ஸ் அணி டாஸை தோற்று முதலில் பேட்டிங் செய்ய அழைக்கப்பட்ட நிலையில், அந்த அணி 20 ஓவர்களில் சின்னசாமி மைதானம் முழுவதும் வாணவேடிக்கை காட்டி 287 ரன்களை குவித்துள்ளது. இதில் 22 சிக்ஸர்கள் (132 ரன்கள்), 19 பவுண்டரிகள் (76 ரன்கள்) அடங்கும். தன்னிடம் இருந்த ஆறு பந்துவீச்சாளர்களையும் ஆர்சிபி அணி பயன்படுத்தியும் சன்ரைசர்ஸ் அணியின் அதிரடிக்கு முட்டுக்கட்டை போடவே முடியவில்லை.

மேலும் படிக்க | சிஎஸ்கேவுக்கு அடுத்த 2 போட்டியும் வெற்றி தான்... பிரகாசமாகும் பிளே ஆப் வாய்ப்பு - அது எப்படி?

பவர்பிளே ஓவர் முடிவிலேயே அந்த அணி விக்கெட் இழப்பின்றி 76 ரன்களை அடித்தது, பவர்பிளே ஓவர்களிலேயே டிராவிஸ் ஹெட்டும் அரைசதத்தை கடந்துவிட்டார். அபிஷேக் சர்மா 22 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 34 ரன்களை சேர்த்து வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 108 ரன்களை சேர்த்தது. அவர் ஆட்டமிழந்தாலும் தனது அதிரடியை ஹெட் நிறுத்தவே இல்லை, மறுபக்கம் இறங்கிய கிளாசெனும் தன்னுடையை பங்குக்கு ஆர்சிபி பந்துவீச்சாளர்களை பதம்பார்த்தார். 

ஹெட் சதம் அடித்து ஆட்டமிழந்தார். அவர் 41 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளை பறக்கவிட்டு 102 ரன்களை குவித்து அதகளப்படுத்தினார். பெர்குசன் வீசிய ஸ்லோயர் பந்தில் டூ பிளெசிஸ் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 248.78 ஆகும். மறுபுறம் கிளாசெனும் சிக்ஸர் மழையை பொழிந்து அரைசதத்தை கடந்தார். அவர் 31 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 67 ரன்கள் எடுத்து பெர்குசன் பந்தில் ஆட்டமிழந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 216.13 ஆகும்.

ஆனால், மார்க்ரம் மற்றும் அப்துல் சமத் ஜோடி கடைசி வரை இருந்து தங்களின் அதிகபட்ச ஸ்கோர் சாதனையை முறியடித்தனர். மார்க்ரம் 17 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 32 ரன்களை குவித்தார். அப்துல் சமத் 10 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 37 ரன்களை அடித்தார். ஐபிஎல் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோரும் இதுதான். 

ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்களும் இதுதான். மேலும், டி20 வரலாற்றில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஆசிய விளையாட்டு போட்டிகளில் மங்கோலியா அணிக்கு எதிரான போட்டியில் நேபாள அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 314 ரன்களை அடித்ததுதான் டி20 வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். 

மேலும் படிக்க | ஐபிஎல் 2024: தோனி 4 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தது எப்படி? பிக் சீக்ரெட் இதுதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News