என்னுடைய இந்த நிலைக்கு ஹர்திக் பாண்டியா தான் காரணம் - இந்திய வீரர் கருத்து!

ஐபிஎல் 2022ல் குஜராத் டைட்டன்ஸ் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டம் அனைவராலும் பாராட்டப்பட்டது.  

Written by - RK Spark | Last Updated : Jun 5, 2022, 03:22 PM IST
  • குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த ஆண்டு கோப்பையை வென்றது.
  • தனது முதல் ஐபிஎல் போட்டியிலேயே கோப்பையை வென்று சாதனை படைத்தது.
  • ஹார்த்திக்கின் கேப்டன்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
என்னுடைய இந்த நிலைக்கு ஹர்திக் பாண்டியா தான் காரணம் - இந்திய வீரர் கருத்து! title=

ஹர்திக் பாண்டியா இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) தனது கேப்டன்ஷிப்பில் அனைவரையும் கவர்ந்தார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக, டி20 கிரிக்கெட் லீக்கில் தனது முதல் சீசனில் தனது அணியை பட்டத்துக்கு அழைத்துச் செல்ல நம்பிக்கையுடன் வழிநடத்தினார். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டார். ஒரு புதிய அணியை பக்குவப்படுத்தி, ஊக்குவித்து சிறப்பாகச் அணியை வழிநடத்தினார்.  குஜராத் அணி ஹர்திக்கின் தலைமையில், லீக் போட்டியில் 10 வெற்றிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. பின்னர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் எளிதாக வெற்றி பெற்றது.

Pandya

மேலும் படிக்க | அர்ஜுன் டெண்டுல்கரை சச்சினுடன் ஒப்பிட வேண்டாம் - கபில் தேவ்!

ஹர்திக்கின் கேப்டன்சியை வீரேந்திர சேவாக் மற்றும் சுனில் கவாஸ்கர் போன்ற பல முன்னாள் வீரர்கள் பாராட்டினர். இப்போது அவரது குஜராத் அணி வீரரும் விக்கெட் கீப்பருமான விருத்திமான் சாஹா ஹர்திக்கை பாராட்டியுள்ளார்.  “யாரும் நம்பாத வெவ்வேறு அணிகளால் விடுவிக்கப்பட்ட அனைத்து வீரர்களிடமும் ஹர்திக் நம்பிக்கை காட்டினார். நான் விற்பனையாகாமல் இருந்தேன் (ஐபிஎல் 2022 மெகா ஏலத்தின் முதல் நாளில்) ஆரம்பத்தில் எனக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிறகு அவர் வந்தார். நான் ஒரு தொடக்க ஆட்டக்காரரின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார், என் நம்பிக்கையை திரும்பப் பெற்றேன். என்னை நிரூபிக்க ஒரு மேடையை அவர் எனக்கு வழங்கினார். 

gt

அவருடைய பங்களிப்பை ஒருபோதும் மறக்க முடியாது. அவருடைய நம்பிக்கையை நான் செலுத்த என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். உண்மையில், அனைத்து வீரர்களும் தங்கள் கடமைகளை நிறைவேற்றினார்கள், அதுதான் எங்களை சாம்பியன் அணியாக மாற வைத்தது. ஓப்பனர்கள் செயல்படும் போது கேப்டன் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார். பெரிய விஷயம் என்னவென்றால், அவர் என்னை நம்பினார். பல போட்டிகளில் நாங்கள் நல்ல தொடக்கத்தை பெறவில்லை என்றால், அது டக்அவுட்டை பல மடங்கு மோசமாக்கிவிடும் என்று ஹர்திக் கூறுவார். அதனால், அணியை நல்ல தொடக்கத்திற்கு கொண்டு செல்வதே எனது பணியாக இருந்தது," என்று கூறினார்.

மேலும் படிக்க | அடுத்த சீசனில் இந்த 3 வீரர்களை கழட்டிவிடும் SRH அணி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News