புது டெல்லி: முதுகுவலி காயம் காரணமாக ஓய்வில் இருந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா திரும்பத் தயாராக உள்ளார். அவரிடம் நம்பர் 7 இடத்தில் களம் இறங்கும் நீங்கள் மகேந்திர சிங் தோனியை போல நல்ல ‘ஃபினிஷர்’ ஆக இருப்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், எம்.எஸ்.தோனியுடன் என்னை ஒப்பிடுவது சரியானது இல்லை. அவரின் காலணிகளை நிரப்ப என்னால் ஒருபோதும் முடியாது என்று கூறினார்.
சர்வதேச போட்டிகளில் எம்.எஸ். தோனி விளையாடாத நிலையில், ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா மீது அனைவரின் கண்களும் இருக்கிறது, ஏனென்றால் கடைசி கட்டத்தில் அணிக்கு ஒரு நல்ல ஃபினிஷராக தோனிக்கு பிறகு அவர் இருப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு தான்.
அண்மைய காலமாக காயம் காரணமாக போட்டியில் பங்கேற்காமல் இருந்த இந்தியா ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா அணியில் திரும்பத் தயாராக உள்ளார். அவர் இந்தியாவின் முக்கிய வீரர்களில் ஒருவர். பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என மூன்று விதத்திலும் கலக்கக் கூடியவர். 2020 இல் டி-20 உலகக் கோப்பையில், இவரது இருப்பு முக்கிய பங்கு வகிக்கும். பாண்டியாவின் கடினத்திறன், டெத் ஓவர்களில் நன்றாக பந்து வீசும் திறன் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்து வருகிறது.
எம்.எஸ். தோனி குறித்து பேசிய அவர், இந்திய அணியில் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனியின் காலணிகளை நிரப்ப முடியாது. அவரின் ஃபினிஷர் பாத்திரத்திற்கு மாற்று கிடையாது. அது சாத்தியமில்லை என்று அவர் கூறினார்.
என்னை பொறுத்த வரை நேர்மையாககாவும், சவால் நிறைந்த போட்டிகளில் பங்கேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் என்ன செய்தாலும், அது உங்கள் முன்னால் இருக்கும் என்றார் பாண்டியா.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.