மீண்டும் திருமணம் செய்ய உள்ள ஹர்திக் பாண்டியா! ஏன் தெரியுமா?

ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டான்கோவிச் காதலர் தினத்தன்று மீண்டும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Feb 13, 2023, 07:40 AM IST
  • ஹர்திக் பாண்டியா, நடாஷா ஸ்டான்கோவிச்சை மீண்டும் திருமணம்.
  • உதய்பூரில் திருமணம் செய்ய உள்ளனர்.
  • இவர்களுக்கு ஏற்கனவே குழந்தை பிறந்துள்ளது.
மீண்டும் திருமணம் செய்ய உள்ள ஹர்திக் பாண்டியா! ஏன் தெரியுமா? title=

இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தற்போது ஓய்வில் இருந்து வருகிறார்.  நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் அணியை தலைமை தாங்கி வெற்றியும் பெற்றார் ஹர்திக் பாண்டியா.  இவரது தலைமையில் இந்திய அணி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது.  தற்போது ரோஹித் சர்மா தலைமையிலான டெஸ்ட் அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுடன் சொந்த மண்ணில் விளையாடி வருகிறார். 4 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்டில் இந்தியா ஆஸ்திரேலியாவை இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.  அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் சூழலில் ஆஸ்திரேலியா அணி திசை மாறி போனது.  தற்போது சுவாரஸ்யமான விஷயம் என்ன என்றால் பாண்டியா மீண்டும் திருமணம் செய்ய உள்ளார். கிரிக்கெட் வீரர் பாண்டியா பாலிவுட் நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சை மும்பை நீதிமன்றத்தில் மே 31, 2020 அன்று திருமணம் செய்து கொண்டார் என்பது ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். 

natasa-stankovic

மேலும் படிக்க | 'வரான் பாரு வேட்டைக்காரன்' - ஆஸ்திரேலியாவை அடக்க வரும் ரிஷப் பந்த்... புது புகைப்படங்கள்!

பின்னர், இந்த ஜோடிக்கு அகஸ்தியா என்ற ஆண் குழந்தை பிறந்தது. இப்போது, ​​வெளியான தகவலின் படி, ஹர்திக் மற்றும் நடாஷா இந்த காதலர் தினத்தில் (பிப்ரவரி 14) மீண்டும் திருமணம் செய்ய உள்ளனர்.  இதற்கு காரணம் என்னவென்றால் உதய்பூரில் திருமணத்தை கொண்டாட விரும்புவதாக இருவரின் நெருங்கிய வட்டாரம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. முன்னதாக அவர்கள் நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொண்டதால் நட்சத்திர ஜோடி பிரமாண்டமான திருமண கொண்டாட்டத்தை நடத்தவில்லை, ஆனால் இப்போது அவர்கள் தங்கள் காதலை ஆடம்பரமான திருமண விழாவுடன் கொண்டாட முடிவு செய்துள்ளனர். "அப்போது அவர்கள் ஒரு நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொண்டனர். அது நடந்தவுடன் எல்லாம் அவசரமானது. அவர்கள் ஒரு ஆடம்பரமான திருமணத்தை நடத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்கள் மனதில் இருந்திருக்கிறது. அவர்கள் அனைவரும் அதைப் பற்றி மிகவும் உற்சாகமாக உள்ளனர்," என்று பாண்டியாவின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகிறது.

natas

இதுவரை வெளியான தகவலின் படி, திருமண விழா பிப்ரவரி 13-ஆம் தேதி தொடங்கி 16 வரை நடைபெறும். இந்த திருமணவிழாவில், ஹல்தி, மெஹந்தி மற்றும் சங்கீத் போன்ற திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் மிகவும் உற்சாகமாக நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துவங்கியது.  திருமணத்திற்கு முந்தைய விழாக்களான ஹல்டி, மெஹந்தி மற்றும் சங்கீத் இரவு போன்ற விழாக்கள் பிப்ரவரி 13 ஆம் தேதி தொடங்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | IND vs AUS: KL ராகுல் அணியில் எதற்கு? வெளுத்து வாங்கிய முன்னாள் வீரர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News