Gautam Gambhir on Suryakumar yadav: ஆசிய கோப்பை சாம்பியனான இலங்கை அணிக்கு எதிரான 3வது 20 ஓவர் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. தொடரை தீர்மானிக்கும் இப்போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி, 91 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி 20 ஓவர் தொடரைக் கைப்பற்றியது. இந்திய அணியின் தூணாக இருக்கும் சூர்யகுமார் யாதவ், வாணவேடிக்கைகள் காட்டி 112 ரன்கள் குவித்தார். அவரின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி 228 ரன்களை குவித்ததுடன், வெற்றி பெறுவதற்கும் விதையாக அமைந்தது.
மேலும் படிக்க | இலங்கை அணிக்கு எதிராக வாண வேடிக்கை!! ... சதமடித்த சூர்யகுமார் யாதவ்
பின்னர், ஆட்டநாயகனாக சூர்யகுமார் தேர்வு செய்யப்பட்டார். அவரின் ஆட்டம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் காம்பீர், சூர்ய குமாரை இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக சிறப்பாக சூர்யகுமார் விளையாடி வருவதால், அவரை இந்திய டெஸ்ட் அணிக்கு பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
— Gautam Gambhir (@GautamGambhir) January 7, 2023
இதற்கு ரசிகர்களும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், ரஞ்சி கோப்பையில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சர்ப்ராஸ் கானை இந்திய அணிக்கு பரிந்துரைக்குமாறு அவரிடம் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சூர்யகுமார் யாதவ், இலங்கை அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் அடித்த சதம், சர்வதேச 20 ஓவர் போட்டியில் அவர் அடித்த 3வது சதமாக பதிவானது. அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 4 சதங்களுடன் ரோகித் சர்மா முதல் இடத்திலும், 3 சதம் அடித்த சூர்ய குமார் யாதவ் 2வது இடத்திலும் இருக்கின்றனர்.
மேலும் படிக்க | விராட் வருவார்... உலகக்கோப்பையை வாங்கித் தருவார்... சீக்காவின் சொல்லும் சீக்ரெட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ