முக்கிய விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்திய 329/6

Last Updated : Aug 12, 2017, 05:37 PM IST
முக்கிய விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்திய 329/6 title=

முதல் நாளில் இந்தியா முக்கிய விக்கெட்களை அடுத்தடுத்து பறிகொடுத்து உள்ளது. 6 விக்கெட் இழப்பு 329 ரன்கள் எடுத்துள்ளது.

முன்னதாக ராகுல் 85 ரன்களிலும், ஷிகர் தவன் 119 ரன்களிலும், புஜார 8 ரன்களிலும் அவுட் ஆனார்கள். தேநீர் இடைவேளைக்கு பிறகு ரஹானே 17 ரன்களில் ஆட்டம் இழந்தார். 

டெஸ்ட் போட்டியில் ஷிகர் தவன்  தனது 6_வது சதத்தை பூர்த்தி செய்தார். இது இந்த தொடரின் 2_வது சதமாகும். இலங்கைக்கு எதிராக மூன்றாவது முறையாக சதம் அடித்துள்ளார்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் தவான் மற்றும் ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். ஆனால் ராகுல் 85 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்த வந்த புஜாரா, தவானுடன் சேர்ந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் ஷிகர் தவன் தனது சதத்தை பூர்த்தி செய்தார்.

தற்போதைய நிலவரப்படி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவரில் இந்திய 6 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்துள்ளது.

பண்டே 1(6) மற்றும் சஹா 13(38) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

Trending News