FIFA World Cup: முதல் வெற்றியை பதிவு செய்தது ரஷ்யா!

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்ய அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது!!

Last Updated : Jun 15, 2018, 12:10 PM IST
FIFA World Cup: முதல் வெற்றியை பதிவு செய்தது ரஷ்யா! title=

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்ய அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது!!

32 நாடுகளின் அணிகள் கலந்துக் கொள்ளும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் தொடங்கி உள்ளது. இந்த போட்டியானது 64 ஆட்டங்களாக நடைபெறுகிறது. இதற்காக 11 நகரங்களில் 12 மைதானங்கள் தேர்வுசெய்யப்பட்டு தயார்படுத்தப் பட்டுள்ளன.

இதில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்-அவுட்’ என்ற 2-வது சுற்றுக்கு முன்னேறும். 

இந்நிலையில் முதல் ஆட்டத்தில் ரஷியா- சவுதிஅரேபியா அணிகள் லுஸ்னிகி மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் முதலில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய ரஷிய அணி சவுதிஅரேபியா அணியை வீழ்த்தி 5-0 என்ற கோல்கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ரஷ்ய அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது!

 

Trending News