FIFA_2018: 2-1 கோல் கணக்கில் செர்பியாவை வென்ற ஸ்விட்சர்லாந்து!!

குரூப் 'இ' பிரிவில் செர்பியா மற்றும் ஸ்விட்சர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில், செர்பியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது ஸ்விட்சர்லாந்து!!

Last Updated : Jun 23, 2018, 10:26 AM IST
FIFA_2018: 2-1 கோல் கணக்கில் செர்பியாவை வென்ற ஸ்விட்சர்லாந்து!! title=

குரூப் 'இ' பிரிவில் செர்பியா மற்றும் ஸ்விட்சர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில், செர்பியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது ஸ்விட்சர்லாந்து!!

FIFA உலக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஸ்யாவில் நடைப்பெற்று வருகிறது. 32 நாடுகளின் அணிகள் கலந்துக் கொள்ளும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டியானது 64 ஆட்டங்களாக நடைபெறுகிறது. இதற்காக 11 நகரங்களில் 12 மைதானங்கள் தேர்வுசெய்யப்பட்டு தயார்படுத்தப் பட்டுள்ளன.

இதில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்-அவுட்’ என்ற 2-வது சுற்றுக்கு முன்னேறும்.

இந்நிலையில், இதில் குரூப் 'இ' பிரிவில் செர்பியா மற்றும் ஸ்விட்சர்லாந்து அணிகள் கலினின்கிராட் மைதானத்தில் மோதினர். இன்று நடந்தது. இப்போட்டியில் ஸ்விட்சர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஆட்டம் தொடங்கியதிலிருந்து செர்பியா ஆதிக்கம் செலுத்தியது. 5-வது நிமிடத்தில் துசான் தாடிச் அடித்த கிராஸை, ஹெட்டர் கோல் ஆக்கி அசத்தினார் செர்பியாவின் அலெக்ஸாண்டர் மிட்ரோவிச். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 1-0 என்ற கோல் கணக்கில் செர்பியா முன்னிலை பெற்றது. இந்த அதிர்ச்சியில் இருந்து முதல்பாதி முடியும்வரை ஸ்விட்சர்லாந்து அணியால் மீள முடியவில்லை. தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளையும் ஸ்விட்சர்லாந்து அணியினரால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இதனால் முதல்பாதி முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் செர்பியா முன்னிலை பெற்றது. 

இந்நிலையில் 90 வது நிமிடத்தில் ஸ்விட்சர்லாந்தின் சாச்சிரி தனக்குக் கிடைத்த பந்தை, தனது எல்லையில் இருந்து தனி ஆளாக செர்பியாவின் பாக்ஸ் வரை எடுத்துச்சென்று அற்புதமான கோல் அடித்தார். ஆட்டம் ஸ்விட்சர்லாந்து வசம் சென்றது. நிறுத்த நேரமாக 4 நிமிடங்கள் தரப்பட்டது. இதில் செர்பியா அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்விட்சர்லாந்து வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 'இ' பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. 2018 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இதுவரை முதல் கோல் அடித்து முதல்பாதியில் முன்னிலை பெற்ற அணிகளே வெற்றிபெற்று வந்தன. 

இப்பிரிவில் பிரேசில் அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 3 புள்ளிகளுடன் செர்பியா மூன்றாவது இடத்திலும் உள்ளன!!

 

Trending News