20 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகளை அர்ஜென்டினா நடத்தும் என ஃபீஃபா அறிவித்தது. மே 20 முதல் ஜூன் 11 வரை 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகள் நடைபெறும் என்று ஃபிஃபா அறிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னதாக, இந்தோனேசியா போட்டிளை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து, கால்பந்து போட்டிகளை நடத்தும் ஹோஸ்டிங் உரிமையைப் பெற்றுள்ளதால், அர்ஜென்டினா இந்தோனேசியாவின் இடத்தில் பங்கேற்கும். அந்த அணி தகுதி அடிப்படையில் தகுதி பெறத் தவறிவிட்டது.
The Bureau of the FIFA Council has confirmed Argentina as the host of the FIFA U-20 World Cup 2023
— FIFA Media (@fifamedia) April 17, 2023
"இந்த ஆண்டுக்கான FIFA U-20 உலகக் கோப்பையின் பதிப்பு அர்ஜென்டினாவில் நடைபெறும் என்பதை அறிவிப்பதில் FIFA மகிழ்ச்சியடைகிறது, ஏனெனில் உலக சாம்பியன்களின் தாயகம், நாளைய உலக கால்பந்தின் சூப்பர் ஸ்டார்களுக்கு தனது கதவுகளைத் திறக்கிறது" என்று FIFA தலைவர் கியானி இன்ஃபான்டினோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | MS Dhoni: கடைசி நிமிடத்தில் த்ரில் வெற்றிகளை கொடுக்கும் சிஎஸ்கே கேப்டன் தோனி
ஃபீஃபா 20 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகளில் இஸ்ரேல் பங்கேற்பதற்கு இந்தோனேசியாவில் அதிருப்தி நிலவியது. கடந்த மாதம் இந்தோனேசியாவில் இது தொடர்பாக போராட்டங்களும் எதிர்ப்பும் தொடங்கியதை அடுத்து, ஃபிஃபா ஹோஸ்டிங் உரிமைகளை திரும்பப் பெற்றது.
இந்தோனேசியா மற்றும் இஸ்ரேலுக்கு முறையான இராஜதந்திர உறவுகள் இல்லை, மேலும் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட முஸ்லீம்-பெரும்பான்மை நாடான இந்தோனேசியாவில், பாலஸ்தீனம் தொடர்பான விவகாரத்தின் அடிப்படையில் இஸ்ரேல் மீது கசப்புணவு உள்ளது.
இந்த நிலையில், போட்டிகளை நடத்த அர்ஜென்டினாவும் தயாராக இருந்தது. இந்தோனேசியாவில் போட்டிகளை நடத்துவதற்கான வசதிகள் மற்றும் ஏற்பாடுகள் தொடர்பாக கடந்த வாரம் ஃபீஃபா ஆன்-சைட் ஆய்வு நடத்தியது. அதன் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணியின் புதிய கோச்! வில்வித்தையில் இந்தியா
இந்தோனேசியாவுக்கு பதிலாக அர்ஜெண்டினாவில் 20 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகளை நடத்துஅதாக FIFA அறிவிப்புக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, அர்ஜென்டினா அரசாங்கம் அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தின் (AFA) ஹோஸ்டிங் ஏலத்திற்கு முழு ஆதரவை வெளிப்படுத்தியது.
ஆழமான பொருளாதார துயரங்களை எதிர்கொண்டுள்ளது, சர்வதேச நாணய நிதியம் ஐ.எம்.எஃப் கடன் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து செல்வது, பணவீக்கம் 100 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என பல பிரச்சனைகளை நாடு எதிர்கொண்டுள்ளது..
உலக சாம்பியனான அர்ஜென்டினா மொத்தம் 6 முறை 20 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து-20 உலகக் கோப்பைகளை வென்றுள்ளது.
மேலும் படிக்க | IPL CSKvsRCB: தோனிக்கு முழங்கால் காயம்.. ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடுவாரா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ