IND vs WI: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் இருந்து ரஹானே நீக்கம்? பிசிசிஐ ட்வீட்

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் இருந்து அஜிங்கியா ரஹானே நீக்கப்பட்டதாக பிசிசிஐ டிவிட்டர் பக்கத்தில் வெளியான அறிவிப்பு கிரிக்கெட் வட்டாரத்தல் பீதியை ஏற்படுத்தியது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 7, 2023, 06:30 PM IST
  • அஜிங்கியா ரஹானே நீக்கம்
  • பிசிசிஐ அறிவிப்பின் பின்னணி
  • ரசிகர்களுக்கு காத்திருந்த ஷாக்
IND vs WI: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் இருந்து ரஹானே நீக்கம்? பிசிசிஐ ட்வீட்  title=

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையே ஜூலை 12 ஆம் தேதி தொடங்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக, 'பிசிசிஐ'யின் ட்வீட் திடீரென பீதியை உருவாக்கியுள்ளது. அதில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து அஜிங்க்யா ரஹானே நீக்கப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளில் நடந்த பயிற்சியின் போது அஜிங்க்யா ரஹானேவின் இடது தொடை தசையில் காயம் ஏற்பட்டதாகவும், அவருக்கு பதிலாக பிரியங்க் பஞ்சால் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அவர் அமைதியானவர் இல்லை! தோனியின் மறுபக்கத்தை அம்பலப்படுத்திய முன்னாள் வீரர்!

ரஹானே நீக்கம்?

'பிசிசிஐ'யின் இந்த ட்வீட்டைப் பார்த்த ரசிகர்கள் என்ன நடந்தது என்று அதிர்ச்சியடைந்தனர். இந்திய அணியின் டெஸ்ட் துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே எப்படி இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் இருந்து திடீரென வெளியேற முடியும்? என்ற கேள்வி எழுந்தது. பலர் இந்த டிவிட்டர் பதிவை பார்த்தவுடன் உண்மை என்று கூட நினைத்தனர். பிசிசிஐ டிவிட்டர் கணக்குப் போல் இருக்கும் போலி டிவிட்டர் கணக்கில் இருந்து இந்த பதிவு எழுதி பகிரப்பட்டுள்ளது. போலி என அறிவதற்கு முன்பே பலர் இந்த டிவிட்டர் பதிவால் குழப்பத்துக்கும் உள்ளாகினர்.

ரஹானே எப்படி இருக்கிறார்?

அஜிங்க்யா ரஹானே முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். ஜூலை 12, 2023 இல் தொடங்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட தீவிர பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். 18 மாதங்கள் இந்திய அணியில் இருந்து வெளியேறிய பிறகு, அஜிங்க்யா ரஹானேவுக்கு பிசிசிஐ மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளது. அத்துடன் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பொறுப்பும் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. 35 வயதான அஜிங்க்யா ரஹானே, இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஒன்றரை ஆண்டுகளாக விலகியிருந்தார். 2021ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவர், அணியில் இருந்தும் ஓரங்கட்டப்பட்டார். 

இந்திய அணியில் மீண்டும்

அதாவது, ஜனவரி 2022-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டுக்குப் பிறகு அஜிங்க்யா ரஹானே இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதன் பிறகு அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது என நினைத்தபோது, அஜிங்க்யா ரஹானே, ரஞ்சி டிராபி 2022-23 சீசனில் சிறப்பாகச் செயல்பட்டு ஐபிஎல் 2023-ல் சென்னை சூப்பர் கிங்ஸில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். ஐபிஎல் 2023ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் அஜிங்க்யா ரஹானே இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பினார். இந்த மாதம், ஜூன் 7, 2023 முதல் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வியடைந்தாலும், அஜிங்க்யா ரஹானே அபாரமாக விளையாடினார். முதல் இன்னிங்சில் 89 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 46 ரன்களும் எடுத்தார். இதற்காக இந்திய அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்ட அவருக்கு டெஸ்ட் அணியின் துணைக்கேப்டன் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Happy Birthday Dhoni: தோனியின் இந்த ஒரு சாதனையை யாராலும் தொட கூட முடியாது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News