மும்பைக்கு ஐஸ் வைக்கும் டூபிளசிஸ் - இதற்கு தானா?

ஆர்சிபி அணியின் கேப்டன் டூபிளசிஸ், மும்பை அணியில் இருக்கும் இந்த வீரர் அடித்து ஆடுவதை பார்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்

Written by - S.Karthikeyan | Last Updated : May 20, 2022, 04:12 PM IST
  • மும்பை அணிக்கு ஐஸ் வைக்கும் டூபிளசிஸ்
  • ஆர்சிபி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல ஒரு வாய்ப்பு
  • கடைசி போட்டியில் மும்பை வெற்றி பெற வேண்டும்
மும்பைக்கு ஐஸ் வைக்கும் டூபிளசிஸ் - இதற்கு தானா? title=

ஐபிஎல் போட்டி கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதும், செல்லாததும் இப்போது மும்பை கையில் இருக்கிறது. மும்பை அணி தன்னுடைய கடைசி போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றால் மட்டுமே டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதனால், டெல்லி போட்டிக்கு முன்பாக மும்பை அணிக்கு ஐஸ் வைத்துள்ளார் டூபிளசிஸ். 

மேலும் படிக்க | அந்தரத்தில் பறந்த பேட் - ஷாக்கான ஹர்த்திக் பாண்டியா மனைவி

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு பேசிய டூபிளசிஸ், விராட் கோலி ஃபார்முக்கு திரும்பியது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். அவர் ஒரு சாம்பயன் பிளேயர் எனக் கூறிய அவர், சரியான தருணத்தில் அணிக்கு தேவையான வெற்றியை பெற்றுக் கொடுத்திருப்பதாக புகழாரம் சூட்டினார். வெற்றி பெற்றே ஆக வேண்டிய மேட்சில் விராட் ஃபார்முக்கு திரும்பியது ஒட்டுமொத்த அணியினருமே உற்சாகத்தில் இருப்பதாக குறிப்பிட்ட டூபிளசிஸ், அவர் மீது அணி வைத்திருந்த நம்பிக்கை துளியளவு கூட குறையவில்லை எனத் தெரிவித்தார். 

பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது இப்போது மும்பை மற்றும் டெல்லி அணியின் முடிவைப் பொறுத்திருப்பதால், அந்தப் போட்டியை பெங்களூரு அணி எதிர்பார்த்திருப்பதாக கூறினார். விராட்கோலியைப் போலவே ஃபார்ம் அவுட்டில் தடுமாறி வரும் ரோகித் சர்மா தன்னுடைய பழைய ஃபார்முக்கு திரும்புவதை ஆவலோடு எதிர்நோக்கி இருப்பதாக கூறியுள்ளார். ரோகித் சர்மாவின் பேட்டிங்கை பார்ப்பதில் தனக்கு தனிப்பட்ட முறையில் ஆர்வமாக எப்போதும் இருக்கும் என்பதால், அவருடைய மிகப்பெரிய ஆட்டத்தை நான் காண விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார். 

மும்பை அணி வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலையில், டூபிளசிஸ் மும்பைக்கு ஐஸ் வைத்துள்ளார். அதேநேரத்தில் மும்பை அணி இந்த தொடர் சிறப்பாக அமையவில்லை. கடைசி போட்டியிலாவது வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது. இதனால், மும்பை - டெல்லி அணிகள் மோதும் இறுதி லீக் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் படிக்க | மலைக்க வைக்கும் ஐபிஎல் இறுதிப்போட்டி டிக்கெட் விலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News