INDvsENG: 2_வது ஒருநாள் போட்டி வெற்றி பெற்று தொடரை வெல்லுமா இந்தியா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று லண்டன் லாட்ச் மைதானத்தில் நடைப்பெறுகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 14, 2018, 12:16 PM IST
INDvsENG: 2_வது ஒருநாள் போட்டி வெற்றி பெற்று தொடரை வெல்லுமா இந்தியா? title=

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று லண்டன் லாட்ச் மைதானத்தில் நடைப்பெறுகிறது.

தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

அந்தவகையில், ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதனையடுத்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் கடந்த 12 ஆம் தேதி துவங்கியது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் (6 விக்கெட்) மற்றும் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மாவின் (137) அதிரடி சதமும் காரணமாக அமைந்தது. இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இன்று லண்டனில் இரண்டாவது போட்டி நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெரும் பட்சத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இந்தியா கைப்பற்றும். அதேபட்சத்தில் இன்றைய ஆட்டத்தில் தோல்வியடைந்தால் ஒரு நாள் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இங்கிலாந்து அணி நிதானமாக விளையாடும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஆனால் முதல் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்தை கதிகலங்க செய்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு உள்ளது.

இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உலக கோப்பை இறுதி ஆட்டத்திற்கு சரியாக 365 நாட்கள் மட்டும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News