England vs New Zealand: 2021 நவம்பரில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்திற்காக விளையாடிய போது ரச்சின் ரவீந்திராவின் பெயரை நாம் முதன் முதலில் பார்த்தோம். தற்போது நியூசிலாந்து அணியின் முக்கிய ஒயிட்-பால் வீரராக இருக்கிறார் ரவீந்திரா. தற்போது உலகக் கோப்பையில் அறிமுகமாகி உள்ளார். வியாழன் அன்று அகமதாபாத்தில் நடந்த 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில், நியூசிலாந்து பேட்டிங் வரிசையில் 3வது இடத்தில் களமிறங்கினார் ரச்சின் ரவீந்திரா. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு அதிரடியாக விளையாடி தனது முதல் சதத்தை அடித்து இங்கிலாந்துக்கு எதிராக தனது அணியை திரில் வெற்றிக்கு அழைத்துச் சென்றார். கேன் வில்லியம்சன் இல்லாத நிலையில், 23 வயதான அவர் 3-வது இடத்தில் பேட்டிங் செய்யத் தேர்வு செய்யப்பட்டார், மேலும் அவர் 93 பந்துகளில் 123 ரன்களை குவித்தார்.
மேலும் படிக்க | Ind vs Aus: இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு! சுப்மன் கில் விளையாடமாட்டார்!
மறுமுனையில் டெவோன் கான்வே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 150 ரன்களை குவித்தார். சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் 2023 பைனலில் இதே மைதானத்தில் சிறப்பாக ஆடிய கான்வே, அதே பார்மில் சதம் அடித்தார். ரச்சின் ரவீந்திரன் நியூசிலாந்தின் வெலிங்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெற்றோருக்கு பிறந்தார். அவரது பெற்றோர்களான ரவி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தீபா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், இவர்களுக்கு இந்தியாவில் இன்னும் உறவினர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ரச்சின் ரவீந்திரன் தந்தை இந்திய கிரிக்கெட் வீரர்களின் மிகப்பெரிய ரசிகராக இருந்ததால், புகழ்பெற்ற இந்திய பேட்ஸ்மேன்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் பெயரை சுருக்கி ‘ரச்சின் ரவீந்திரா’ என்று தனது மகனுக்கு பெயர் வைத்துள்ளார்.
A @cricketworldcup debut to remember! Rachin Ravindra's first hundred in International cricket and the fastest at a World Cup for New Zealand#CWC23 pic.twitter.com/h9XKg7aaJk
— BLACKCAPS (@BLACKCAPS) October 5, 2023
அவரது தந்தை 1990களில் பெங்களூருவிலிருந்து நியூசிலாந்துக்கு சென்றார். நியூசிலாந்து 19 வயதுக்குட்பட்ட அணிக்கு தேர்வு செய்யப்பட்டதன் மூலம் ரவீந்திரா கிரிக்கெட் உலகில் அறிமுகமானார். பின்னர் 2016 மற்றும் 2018 U-19 உலகக் கோப்பைகளில் பங்கேற்றார். அவர் நியூசிலாந்தின் உள்நாட்டு கிரிக்கெட்டில் அனைவரையும் வென்றார், இறுதியில் 2021ல் தனது நாட்டிற்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். அவர் 2018 U-19 உலகக் கோப்பையிலும் பங்கேற்றார், மேலும் அவர் 2021ல் தனது முதல் டி20ல் பங்களாதேஷுக்கு எதிராக விளையாடினார். ரச்சின் ரவீந்திரா விரைவாக டெஸ்ட் போட்டியில் அறிமுகத்தையும், 2023ல் தனது ODI அறிமுகத்தையும் பெற்றார். அவர் இதுவரை மூன்று டெஸ்ட், பன்னிரண்டு ODIகளில் விளையாடியுள்ளார் மற்றும் பதினெட்டு டி20 சர்வதேசப் போட்டிகள் ஆடியுள்ளார்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து - நியூசிலாந்து போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. தொடக்கத்தில் நன்றாக ஆடினாலும், இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. அணியில் உள்ள 11 பேரும் இங்கிலாந்துக்கு பேட்ஸ்மேனாக இருந்தாலும், 50 ஓவர் முடிவில் 282 ரன்களை மட்டுமே அடித்தது. அடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து அணியில் வில் யங் 0 ரன்களில் வெளியேற, இடது கை பேட்ஸ்மேன்களான கான்வே (152), ரவீந்திர (123) ஆகியோர் 273 ரன்கள் பார்ட்னர்ஷிப் உடன், 13.4 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் போட்டியில் வெற்றி பெற்றனர்.
மேலும் படிக்க - Asian Games 2023: வரலாறு படைத்த இந்தியா! இதுவரை இல்லாத அளவுக்கு பதக்க எண்ணிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ