கால்பந்து நட்சத்திரம் நெய்மர், பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் (Paris Saint Germain) அணியுடனான தனது ஒப்பந்தத்தை நீட்டிக்க முடிவு செய்திருக்கிறார். பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு பிரெஞ்சு ஜாம்பவான்களுடன் நான்கு ஆண்டு ஒப்பந்த நீட்டிப்புக்கு ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
ஈஎஸ்பிஎன் அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் (Neymar), Paris Saint Germain அணியுடனான ஒப்பந்தம் காலாவதியாகிறது. எனவே அவர் பாரிஸில் 2026 வரை தங்கியிருப்பார். நீண்ட காலம் ஒரே கிளப்பில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெய்மர் குரல் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரெஞ்சு தொலைக்காட்சியில் நேர்காணல் ஒன்றில் கலந்துக் கொண்ட நெய்மர், இந்த கிளப்பில் தங்க விரும்புவதாக தெரிவித்தார். பேச்சுவார்த்தைகளில் முக்கியப் பங்கு வகித்த பி.எஸ்.ஜியின் விளையாட்டு இயக்குனர் லியோனார்டோ, கிளப்புக்கும் நெய்மருக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் முக்கிய பங்கு வகித்தார்.
Also Read | IND vs Eng: முதல் டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை
பிரெஞ்சு கால்பந்து வீரர் Kylian Mbappe கூட அவரது கிளப்பிலேயே தங்க வைப்பதற்கான முயற்சிகளில் விளையாட்டு இயக்குனர் லியோனார்டோ ஈடுபட்டுள்ளார். Kylian Mbappe-வின் ஒப்பந்தம் 18 மாதங்களில் காலாவதியாகவிருக்கிறது. ஆனால் அவருக்கு ரியல் மாட்ரிட்டுடன் தொடர்பு இருப்பதாக வதந்தி பரப்பப்படுவதால், அவர் தொடர்பான விஷயத்தில் இதுவரை தெளிவு எதுவும் ஏற்படவில்லை.
2017 ஆகஸ்ட் மாதத்தில் Pard des Princes அணிக்கு நெய்மர் வந்த பிறகு, இரண்டு Coupes de France, இரண்டு Coupes de la Ligue மற்றும் இரண்டு Trophees des Champions மற்றும் மூன்று Ligue 1 பட்டங்களை வென்றுள்ளார்.
Also Read | IND v ENG 1st Test: சென்னை மைதானத்தில் வலைப் பயிற்சியில் ஈடுபடும் கேப்டன் விராட் கோலி
பார்சிலோனா (Barcelona) அணியில் இருந்து வெளியேறுவதற்காக, ஈட்டுத் தொகையாக 222 மில்லியன் டாலர் என்ற மிக அதிகமான தொகையை பிரேசில் விளையாட்டு வீரர் நெய்மர் கொடுத்தார். உலகில் இதுவரை எந்தவொரு கிளப்பில் இருந்தும் வெளியேற ஒரு வீரர் கொடுத்த மிகப் பெரியத் தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் கிளப்பில் 100 விளையாட்டுகளை ஆடிய மைல்கல்லை எட்டினார் நெய்மர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் இரண்டு கோல்களை நெய்மர் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | 24 மணி நேரத்தில் 2 km நெடுஞ்சாலையை உருவாக்கி இந்தியா 4 உலக சாதனை
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR