புதன்கிழமை நடைபெற்ற விம்பிள்டனில் ஜோர்டான் தாம்சனை 6-3, 7-6(4), 7-5 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து, உலகின் நம்பர் 2 வீரரான நோவக் ஜோகோவிச் தனது 350வது கிராண்ட்ஸ்லாம் போட்டியில் வெற்றி பெற்றார். 350 போட்டிகளில் வெற்றி பெற்ற மைல்கல்லை எட்டிய மூன்றாவது வீரர் ஜோகோவிச் என்பது குறிப்பிடத்தக்கது
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 369 வெற்றிகள் பெற்று அதிக வெற்றிகளை பெற்றவர் ரோஜர் பெடரர், அவரை அடுத்து அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 365 போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.
தற்போது, 2023ம் ஆண்டிற்கான விம்பிள்டன் போட்டித்தொடரில், தாம்சனை வீழ்த்தி 350வது கிராண்ட்ஸ்லாம் வெற்றியைப் பதிவு செய்தார் ஜோகோவிச்.
Achievement unlocked
Novak Djokovic's 350th Grand Slam match win! #Wimbledon | @DjokerNole pic.twitter.com/Qv0yilhPUm
— Wimbledon (@Wimbledon) July 5, 2023
ஆல் இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப்பில் எட்டாவது பட்டத்தை வெல்வதில் செர்பிய வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்றால், அதிக விம்பிள்டன் பட்டத்தை வென்ற ரோஜர் பெடரரின் சாதனையை சமன் செய்வார், மேலும் ஓபன் கோர்ட்டில் பட்டம் வென்ற அதிக வயதான டென்னிஸ் வீரர் என்ற பெருமையையும் ஜோகோவிச் பெறுவார்.
மேலும் படிக்க | ஆஷஸ் டெஸ்ட் ஏற்படுத்தும் அதிரடி மாற்றங்கள்! ஐசிசி ஆடவர் தரவரிசையில் மாற்றம்
"போட்டியின் ஆரம்பத்தில் நான் அவரைச் சந்திக்க விரும்புகிறேனா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இன்று அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு அவருக்கு வாழ்த்துகள்" என்று ஆட்டத்திற்குப் பிறகு ஜோகோவிச் கூறியதாக atptour.com செய்தி வெளியிட்டுள்ளது.
"இரண்டாவது செட்டில் அவருக்கு சரியான வாய்ப்பு அமையவில்லை. அவருக்கு சில வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் அவர் அதிக டஃப் பைட் கொடுத்து விளையாடினார். அவர் நிச்சயமாக ஒரு பெரிய கைதட்டலுக்கு தகுதியானவர்," என்று ஜோகோவிச் தெரிவித்ததாக atptour.com செய்தி கூறுகிறது.
மேலும் படிக்க | இந்திய அணி மிஸ் செய்யும் இந்த 3 வீரர்கள்... கோப்பையும் கைவிட்டு போக அதிக வாய்ப்பு!
ஜோகோவிச்சிற்கு வலுவான போட்டியைக் கொடுத்த தாம்சன், இரண்டாவது சுற்றில் ஜோகோவிச்சுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுத்தார். இருப்பினும், ஜோகோவிச் சிறப்பாக செயல்பட்டு இரண்டாவது சுற்று ஆட்டத்தை இரண்டு மணி நேரம் 27 நிமிடங்களில் கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டின் டை-பிரேக்கில் தாம்சன் செய்த இரண்டு தவறுகள், அவரை தோல்வியடையச் செய்தன. ஸ்டான் வாவ்ரிங்கா மற்றும் தாமஸ் மார்ட்டின் எட்செவெரி இடையேயான போட்டியில் வெற்றி பெறுபவருடன், ஜோகோவிச் அடுத்ததாக விளையாடுவார்.
மேலும் படிக்க | விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தரவரிசை: நம்பர் 1 கார்லோஸ் அல்கராஸ், இகா ஸ்விடெக்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ