ஐபிஎல் 2022 தொடருக்கான கவுண்டவுன் தொடங்கியுள்ளது. மார்ச் 26 ஆம் தேதி தொடங்க உள்ள முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் பிரம்மாண்ட தொடக்க விழாவைத் தொடர்ந்து முதல் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் விளையாட உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூரத்தில் பயிற்சியை தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க | இந்திய அணிக்கு விளையாட தகுதியற்ற 5 வீரர்கள்...!
கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். சர்வதேச மற்றும் பிற நாட்டு கிரிக்கெட் லீக்குகளில் விளையாடும் மற்ற வீரர்கள் அந்தந்த தொடர்களை முடித்தபின்னர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான பயிற்சியில் இணைய உள்ளனர். சூரத்தில் உள்ள லால்பாய் காண்ட்ராக்டர் மைதானத்தில் சென்னை அணியை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.15 நாட்கள் பயிற்சி முகாம் இருக்கும் என கூறப்படுகிறது. இதற்காக, சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி மற்றும் சக வீரர்கள் நேற்று சூரத் சென்றடைந்தனர்.
அவர்களுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக, பயிற்சிக்காக மைதானத்துக்கு வந்த தோனியை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்கள் தோனி வந்தவுடன் ஆரவார குரல் எழுப்பி தோனியை கொண்டாடினர். அவரும் ரசிகர்களைப் பார்த்து கையசைத்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்தப் புகைப்படங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தங்களின் சமூகவலைதள கணக்கு பக்கங்களில் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துள்ளது. மும்பையில் இருக்கும் பிட்சுகளும், சூரத்தில் சென்னை அணி பயிற்சி பெறும் பிட்சுகளின் தன்மையும் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதால், சென்னை அணி அந்த மைதானத்தை தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | இந்திய அணியை வெற்றிபெற வைக்கப்போகும் அந்த 3 பேர்.! ரோகித் - விராட் இல்லை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR