IPL 2019 தொடரின் 26-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!
IPL 2019 தொடரின் 26-வது லீக் அட்டம் கொல்கத்தா ஈடர்ன் கார்டன் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. கொல்கத்தா அணி தரப்பில் துவக்க வீரர்களாக களமிறங்கிய ஜோ டென்லி 0(1) ரன்களில் வெளியேற, மறுமுனையில் சுபம் கில் 65(39) ரன்கள் குவித்தார். எனினும் இவரை தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். ஆன்றிவ் ருசுவேல் மட்டும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 45(21) ரன்கள் குவித்தார்.
இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் கிறிஸ் மோரிஸ், ரபாடா மற்றும் பவுள் தலா 2 விக்கெட் குவித்தனர்.
இதனையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. துவக்க வீரராக களமிறங்கிய பிரித்திவி ஷா 14(7) ரன்களில் வெளியேறினார் எனினும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளயாடிய ஷிகர் தவான் 97(63) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக ரிஷாப் பன்ட் 46(31) ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஆட்டத்தின் 18.5-வது பந்தில் 3 விக்கெட் மட்டுமே இழந்த நிலையில் டெல்லி அணி 180 ரன்கள் குவித்து வெற்றிபெற்றது.
இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் டெல்லி அணி 8 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 4-ஆம் இடம் பிடித்துள்ளது, கொல்கத்தா அணி தொடர்ந்து 8 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.