IBA: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் எப்போது?

IBA Men World Boxing Championship 2023: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் எப்போது என்ற கேள்விக்கு இன்று முடிவு தெரிந்துவிடும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 12, 2023, 10:56 AM IST
  • சர்வதேச அளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்தும் இந்திய குத்துச்சண்டை வீரர்கள்
  • இந்திய விளையாட்டு வரலாற்றில் முக்கிய நாள்
  • குத்துச்சண்டை விளையாட்டில் முன்னேறும் இந்தியா
IBA: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் எப்போது? title=

உஸ்பெகிஸ்தான்: தீபக், ஹுசாமுதீன், நிஷாந்த் ஆகியோர் இந்தியாவுக்கு தங்கப்பதக்கத்தை பெர்றுத்தந்தனர். மூன்று உறுதிப்படுத்தப்பட்ட பதக்கங்களுடன், மதிப்புமிக்க குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2023 போட்டித்தொடரில் இந்தியா பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. ஐபிஏ ஆடவர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கம் கிடைக்கும் என நாடே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது. 

தீபக் குமார், முகமது ஹுசாமுதீன் மற்றும் நிஷாந்த் தேவ் என இந்திய வீரர்கள், தங்களது அற்புதமான செயல்பாடுகளினால், உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் இன்று நடைபெறும் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2023 போட்டிகளை நோக்கி உலகின் கவனத்தை வழக்கத்தைவிட அதிகமாக ஈர்த்துள்ளனர்.

இவர்களுக்கு மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இந்த இந்திய குத்துச்சண்டை வீரர்கள் தாஷ்கண்டில் நடந்த ஆடவர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும், உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா 3 பதக்கங்களை வெல்வது இதுவே முதல் முறை. என்றும் அவர் பாராட்டுகளை தெரிவித்துள்ளர்.

உஸ்பெகிஸ்தான் (9), கியூபா மற்றும் ரஷ்யா (தலா 6), மற்றும் கஜகஸ்தான் (5) ஆகிய நாடுகள், இந்த சாம்பியன்ஷிப்பில், முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ள நிலையில், பிரபலமான இந்த குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கப் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

மேலும் படிக்க | KKR vs RR: கொல்கத்தாவை பந்தாடிய ஜெய்ஸ்வால்! ராஜஸ்தான் தெறி வெற்றி!

2019 ஆம் ஆண்டு ஆசிய வெள்ளிப் பதக்கம் வென்ற தீபக் குமார் (51 கிலோ) தனது அரையிறுதிப் போட்டியில் இரண்டு முறை உலக வெண்கலப் பதக்கம் வென்ற பிரான்சின் பில்லால் பென்னாமாவை எதிர்கொள்கிறார்.

26 வயதான தீபக் குமார், தனது இரண்டாவது உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில், மூன்று வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளார், மேலும் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற கஜகஸ்தானின் சேகன் பிபோசினோவை 32வது சுற்றில் வீழ்த்தி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

தனது சிறப்பான ஆட்டத்தை தக்கவைத்துக் கொள்ள தீபக், ரியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஹசன்பாய் டுஸ்மடோவ் அல்லது நடப்பு ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயினின் மார்ட்டின் மோலினாவை எதிர்கொள்வார்.

தனது முதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிடும் முகமது ஹுசாமுதீன் (57 கிலோ) கியூபாவின் சைடெல் ஹோர்டாவுக்கு எதிராக களமிறங்குவார். இரண்டு முறை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர், இதுவரை நடந்த போட்டிகளில் அவரது அனைத்துப் போட்டிகளிலும் தனது செயல்திறனை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தியுள்ளார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கானாவைச் சேர்ந்த அனுபவமிக்க வீரர் ஹுசாமுதீன், 2021 உலக சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கம் வென்ற உஸ்பெகிஸ்தானின் அப்துல்மாலிக் கலோகோவ் அல்லது கிர்கிஸ்தானின் முனார்பெக் சீட்பெக்-உலுவை எதிர்த்து இறுதிப் போட்டியில் களம் இறங்கலாம்.

மேலும் படிக்க | IPL 2023: பிளே ஆஃப்க்கு போட்டி போடும் 10 அணிகள்! யாருக்கு தான் வாய்ப்பு அதிகம்?

கடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதிப் போட்டியை உறுதி செய்த இந்திய வீரர் நிஷாந்த் தேவ் (71 கிலோ) அரையிறுதியில் நடப்பு ஆசிய சாம்பியனான கஜகஸ்தானின் அஸ்லான்பெக் ஷிம்பெர்கெனோவை எதிர்த்துப் போராடுகிறார்.

கர்னாலில் பிறந்த இவர், தனது உலகத் தரம் வாய்ந்த திறமைகளின் மூன்று வெற்றிகளையும் பதிவு செய்துள்ளார். 22 வயதான அவர் தனது செழுமையான குத்துச்சண்டை திறமையை உறுதி செய்ய, இரண்டு முறை ஆசிய சாம்பியனான உஸ்பெகிஸ்தானின் சைட்ஜாம்ஷித் ஜாபரோவ் அல்லது 2018 ஆம் ஆண்டு தென் அமெரிக்க சாம்பியனான பிரேசிலின் வாண்டர்சன் டி ஒலிவேரியாவை எதிர்கொள்வார்.

குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2023 போட்டிகளில் 107 நாடுகளைச் சேர்ந்த 538 குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்கின்றனர். பல ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்கள் உட்பட குத்துச்சண்டை ஜாம்பவான்கள் பலரும் இந்தப் போட்டிகளில் கலந்துக் கொண்டுள்ளனர்.

இந்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு 200,000 அமெரிக்க டாலர் பரிசுத் தொகையும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு 100,000 அமெரிக்க டாலர்களும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு தலா 50,000 அமெரிக்க டாலர்களும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

மேலும் படிக்க | மாட்ரிட் டென்னிஸ் போட்டியில் பெண்களை அவமதித்த போட்டி ஏற்பாட்டாளர்கள்! மன்னிக்க கோரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News