IPL 2019 தொடரின் 38-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது!
IPL 2019 தொடரின் 38-வது லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் ஐதராபாத் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைப்பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதிராபாத் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது.
இதனையடுத்து கொல்கத்தா அணி தரப்பில் துவக்க வீரர்களாக களமிறங்கிய கிறிஸ் லென் 51(47) மற்றும் சுனில் நரேன் 25(8) ரன்கள் குவித்து வெளியேற இவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். அதிரடி நாயகன் ஆண்டிறிவ் ரசலும் 15(9) ரன்கள் மட்டுமே குவித்து ரசிகர்களை ஏமாற்றினார். ரிங்கு சிங் மட்டும் சற்று நிதானமாக விளையாடி 30(25) ரன்கள் குவித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது. ஐதராபாத் அணியின் கலீல் அகமது 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து 160 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்ணர் 67(38) குவித்து வெளியேற ஜானி பாரிஸ்டோ 80*(43) மற்றும் கேன் வில்லியம்சன் 8*(9) இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
ஆட்டத்தின் 15 ஓவர் முடிவில் வெற்றி இலக்கை எட்டிய ஐதராபாத் அணி நடப்பு தொடரின் 5-வது வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் 10 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.