CSK vs RCB Ticket: இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் இந்த ஆண்டு மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் விளையாடுகிறது. இந்த முறை முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன, எப்போதும் ஐபிஎல் போட்டிகள் துவங்கும் முன்பு முக்கிய நட்சத்திரங்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். அந்த வகையில் இந்த முறை ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்த அடி! 2 ஸ்டார் பவுலர்கள் காயம்
இந்த ஆண்டு இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவனை மட்டுமே பிசிசிஐ தரப்பில் இருந்து வெளியிடப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று கூறியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதால் ஐபிஎல் மீதமுள்ள போட்டிகள் துபாயில் நடைபெறும் என்று செய்திகள் வெளியானது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் அதனை பிசிசிஐ மறுத்துள்ளது, மீதமுள்ள அனைத்து போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடைபெறும் என்று உறுதி அளித்துள்ளது.
ஐபிஎல் போட்டிகள் துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மற்ற போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை துவங்கியது. ஆனால், முதல் போட்டியான சென்னை மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான டிக்கெட் விற்பனை துவங்காமல் இருந்தது. இந்நிலையில் இன்று திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு பேடிஎம் இன்சைடர் மூலம் டிக்கெட் விற்பனை நடைபெறும் என்று சென்னை அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது, அதன்படி காலை முதலே ரசிகர்கள் டிக்கெட் விலை புக் செய்ய ஆர்வமாக இருந்தனர். மேலும் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு டிக்கெடுக்களின் விலையில் நிறைய மாற்றங்களும் இருந்தது. 1500 ரூபாய்க்கு விற்கப்பட டிக்கெட்டுகள் 1700 ரூபாய்க்கும், 2500 ரூபாய்க்கு விற்கப்பட்ட விக்கெட்கள் இந்த ஆண்டு நான்காயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
~Price Range for Chepauk Tickets!
•C, D, E lower - ₹ 1.7K
•C, D, E Upper - ₹ 4K
•I, J, K Upper - ₹ 4K
•I, J, K Lower - ₹ 4.5K
•KMK terrace - ₹ 7.5KExpect a big rush when Tickets are put on sale online at Paytm Insider..#WhistlePodu pic.twitter.com/9ynqOeUfqy
— Hustler (@HustlerCSK) March 16, 2024
மேலும் கடந்த முறை ரசிகர்கள் நேரடியாக சென்று டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளும் வசதி இருந்தது, ஆனால் இந்த முறை முழுக்க முழுக்க ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை நடைபெறும் என்று சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்திருந்தது. காலை முதல் ரசிகர்கள் பலரும் டிக்கெட் புக் செய்ய ஆர்வமாக இருந்த நிலையில் டிக்கெட் விற்பனை தொடங்கியதும் டிக்கெட்கள் விற்று தீர்ந்து விட்டதாக பேடிஎம் ஆப்பில் காண்பிக்கப்பட்டது. பலருக்கும் அந்த வெப்சைட் ஒர்க் ஆகவில்லை. பல ரசிகர்கள் தனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்று சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் ஐபிஎல் டிக்கெட் விற்பனையை வைத்து சென்னை அணி மோசடி செய்து வருவதாகவும் ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இருப்பினும் டிக்கெட்களின் தேவை அதிகமாக உள்ளதாகவும், ஸ்பான்சர்களுக்கு அதிகமான டிக்கெட் செல்வதால் ரசிகர்களுக்கு போதிய டிக்கெட்களை கொடுக்க முடியவில்லை என்றும் சிஎஸ்கே நிர்வாகம் ஏற்கனவே கூறியிருந்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ