CSK vs MI: தோனியின் அதிரடியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

CSK vs MI: தோனியின் அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 22, 2022, 10:27 AM IST
  • சென்னை அணி வெற்றி
  • 2வது வெற்றியை பெற்றது
  • மும்பை அணி வெளியேற்றம்
CSK vs MI: தோனியின் அதிரடியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் title=

மும்பை டி.ஓய் பாட்டீல் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சவுத்திரி வீசிய அந்த ஓவரில் ரோகித் சர்மா கேட்ச் என்ற முறையில் டக் அவுட்டானார். அதே ஓவரில் யார்கர் பந்தில் இஷான் கிஷன் கிளீன் போல்டாகி விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதன்பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 21 பந்துகளில் 32 ரன்கள் விளாசி அவுட்டானார். மும்பை அணிக்காக முதல் போட்டியில் களமிறங்கிய ஹிர்திக் 25 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். 43 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் சிறப்பான ஆட்டமே மும்பை அணி கவுரவமான ஸ்கோரை எடுக்க உதவியது. கடைசியில் உதன்கட் 9 பந்துகளில் 19 ரன்கள் விளாச, 20 ஓவர் முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.

மேலும் படிக்க | கேட்ச் பிடிக்க மாட்டோம் என கங்கணம் கட்டிக்கொண்டு விளையாடிய சிஎஸ்கே - பீல்டிங்கில் படுமோசம்

இந்தப் போட்டியில் சென்னை அணியின் பீல்டிங் படுமோசமாக இருந்தது. மொத்தம் 5 கேட்சுகளையும், ஒரு ஸ்டம்பிங்கையும் கோட்டைவிட்டனர். கேப்டன் ஜடேஜா மட்டும் 2 கேட்சுகளை விட்டார். இதன்பின்னர் களமிறங்கிய சென்னை அணிக்கும் முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ருதுராஜ் கெய்க்வாட் முதல் பந்திலேயே கேட்சாகி வெளியேறினார். ஒன்டவுன் இறங்கிய மிட்சல் சானட்டர் 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஷிவம் தூபே 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய அம்பத்தி ராயுடு 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசியில் சிறப்பாக விளையாடிய தோனி, சென்னை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். 13 பந்துகளில் 28 ரன்கள் எடுத்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 2வது வெற்றியை சென்னை அணி பெற்ற நிலையில், முதல் அணியாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து மும்பை அணி வெளியேறியது. 

மேலும் படிக்க | சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் குட்டி சச்சின்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News