முதல் பந்தில் விக்கெட் சேட்டை செய்த அதிரடி வீரர் கிறிஸ் கெயில் - வீடியோ வைரல்

SA vs WI: தற்போது தென்னாப்பிரிக்காவிற்கும் மேற்கிந்திய தீவுகளுக்கும் (South Africa tour of West Indies, 2021) இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நான்காவது போட்டியில் நடந்த சம்வம் வைரலானது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 2, 2021, 04:00 PM IST
  • கிறிஸ் கெயில் சேட்டைகள் வீடியோ ஒவ்வொரு நாளும் வைரலாகிறது.
  • வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக விளையாடி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
  • ஸ்டெய்ன் தனது ட்விட்டரில், "கிறிஸ் கெய்ல் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்" எனப் பதிவிட்டுள்ளார்.
முதல் பந்தில் விக்கெட் சேட்டை செய்த அதிரடி வீரர் கிறிஸ் கெயில் - வீடியோ வைரல் title=

SA vs WI: கிரிக்கெட் உலகில் புகழ்பெற்ற மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் களத்தில் இருக்கும் போது, நீங்கள் அதிரடியான சம்பவத்தை பார்க்க முடியவில்லை என்பது அரிதாகவே இறக்கும். ஏனென்றால் அவர் மைதானத்தில் இருக்கும் போது, அவரின் பேட்டிங் குறித்து பந்து வீச்சாளருக்கு ஒரு பயம் இருந்தாலும் ரசிகர்கள் அதனை பெரிதும் கொண்டாடுகின்றனர். அதேபோல மைதானத்தில் அவரது செய்கை மற்றும் கொண்டாட்டமும் வைரலாகின்றன. கிறிஸ் கெயில் (Chris Gayle Video Viral) செய்யும் சேட்டை வீடியோ ஒவ்வொரு நாளும் வைரலாகிறது. இதுபோன்ற ஒரு வீடியோவும் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. 

சமூக ஊடகங்களில் வீடியோ வைரல்: 
தற்போது தென்னாப்பிரிக்காவிற்கும் மேற்கிந்திய தீவுகளுக்கும் (South Africa tour of West Indies, 2021) இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நான்காவது போட்டியில் நடந்த சம்வம் வைரலானது. அதாவது வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கீரோன் பொல்லார்ட், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இரண்டாவது ஓவரை வீச கிறிஸ் கெயிலுக்கு கொடுத்தார். இந்த போட்டியில் பேட்டிங் மூலம் அதிகம் சாதிக்க முடியாத கெயில், தனக்கு கிடைத்த பந்து வீச்சும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். அதாவது தனது முதல் ஓவரின் முதல் பந்தில் தென்னாப்பிரிக்கா தொடக்க ஆட்டக்காரர் ரிசா ஹெண்ட்ரிக்ஸ் அவுட் செய்து பெவிலியனுக்கு திரும்பி செல்லும் வழியைக் காட்டினார்.

ALSO READ | Best Captain: சிறந்த கேப்டன் ரோஹித் சர்மாவா? விராட் கோலியா?

ரிசா ஹென்ட்ரிக்ஸின் (Reeza Hendricks) விக்கெட்டைக் கைப்பற்றிய பிறகு, கிறிஸ் கெயில் வெளிப்படுத்தி தனது கொண்டாட்டத்தை ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது. அதே நேரத்தில், கெயிலின் திறமையை டேல் ஸ்டெய்னும் பாராட்டினார். ஸ்டெய்ன் தனது ட்விட்டரில், "கிறிஸ் கெய்ல் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்" எனப் பதிவிட்டுள்ளார்.

 

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது:
West Indies vs South Africa இடையே நடைபெற்ற போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக விளையாடி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் கீரோன் பொல்லார்ட் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அதிரடியான இன்னிங்ஸை விளையாடினார், ட்வைன் பிராவோ நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். நான்காவது டி 20 போட்டியில் அணிக்கு திரும்பிய கிறிஸ் கெயில் 5 ரன்கள் மட்டும் எடுத்து அவுட் ஆனார். ஆனால் அவர் தனது ஓவரில் முதல் பந்தில் ஒரு விக்கெட் எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

ALSO READ | MS Dhoni: 2020-யிலேயே ஓய்வு பெற்றுவிட்டாலும், இந்த பட்டியலில் இன்னும் "தல" தான் முதலிடம்

தென்னாப்பிரிக்கா vs மேற்கிந்திய தீவுகள்:
டாஸ் வென்ற சவுத் ஆப்பிரிக்கா அணி முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. களத்தில் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் லென்ட்ல் சிம்மன்ஸ் மற்றும் எவின் லூயிஸ் ஒரு நல்ல தொடக்கத்தை கொடுக்கத் தவறிவிட்டனர். வெறும் 7 ரன்கள் எடுத்த பிறகு லூயிஸ் பெவிலியனுக்கு திரும்பினார். அதிரடி பேட்ஸ்மேன்கள் கிறிஸ் கெய்ல் (5), ஷிம்ரான் ஹெட்மியர் (7) ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். இருப்பினும், கடைசி ஓவர்களில் கேப்டன் கீரோன் பொல்லார்ட் (Kieron Pollard) தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். 204 என்ற ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் பேட்டிங் செய்த பொல்லார்ட், வெறும் 25 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் எடுத்தது. 168 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய தென்னாப்பிரிக்காவின் அணிக்கு 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சவுத் ஆப்பிரிக்கா அணிக்காக குயின்டன் டி கோக் அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News