முன்னணி நடிகர் கிச்சா சுதீப், மேற்கு இந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் இணைந்து, 'சூப்பர் 10' என்ற தனித்துவமான கிரிக்கெட் போட்டியின் முதல் பதிப்பை அறிவித்தனர். இந்த போட்டியில் இந்திய திரை நட்சத்திரங்கள், ஓய்வு பெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர்கள் இணைந்து 10 ஓவர் கொண்ட போட்டிகளில் விளையாடுவார்கள்.
இந்த குறுகிய ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி மிகச்சிறந்த பொழுதுபோக்கை தரும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்போட்டிகள் வரும் டிசம்பர் மாதத்தில், பெங்களூருவில் வைத்து 2 நாள்களுக்கு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த லீக் போட்டிகளில் தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு திரைப்பட துறையைச் சேர்ந்த நடிகர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இணைந்து விளையாட உள்ளனர்.
மேலும் படிக்க | ’என்னென்ன கார் வைத்திருக்கிறீர்கள்’ ரோகித் சர்மா கேட்ட கேள்வி; பாபர் அசாம் ரியாக்ஷன்
மிகப்பெரும் மகிழ்ச்சி...
இப்போட்டி குறித்து கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் கூறுகையில், “உலகம் முழுவதும் உள்ள எனக்கு பிடித்த கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் இந்திய திரைத்துறை பிரபலங்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவது மிகப்பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த போட்டி ‘டி10’ வடிவில் அமைக்கப்பட்டிருப்பதால் மிகப்பெரிய பொழுதுபோக்கை அளிக்கும் என்பது உறுதி. டிசம்பர் எப்போது வரும் என ஆவலாக உள்ளேன்" என்றார்.
'எங்களின் மறுபக்கம்...'
மேலும் இந்த போட்டிகள் குறித்து கிச்சா சுதீப்,“சூப்பர் 10 லீக் கிரிக்கெட் என்பது, திரைத்துறை மற்றும் கார்ப்பரேட் துறையில் உள்ள நண்பர்களுடனும், கிரிக்கெட் வீரர்களுடனும் இணைந்து விளையாடுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த விளையாட்டுகள் எங்களுக்குள் உள்ள மற்றுமொரு பக்கத்தை எங்கள் ரசிகர்களுக்கும் வெளிப்படுத்தும், இது மிகப்பெரிய பொழுதுபோக்கை ரசிகர்களுக்கு வழங்கும்" என்று கூறினார்.
கிரிக்கெட் + பொழுதுபோக்கு
இப்போட்டிகள் குறித்து, சூப்பர் 10 கிரிக்கெட் தொடரின் நிறுவனரும் மற்றும் இயக்குனருமான தினேஷ் குமார் கூறுகையில்,“நாங்கள் இந்த ‘கிரிக்கெட்டைன்மென்ட்’ பொழுதுபோக்கு கான்செப்ட்டில் ஒரு வருடத்திற்கும் மேலாக பணியாற்றி வருகிறோம். இது முதல் பதிப்பாகும். மேலும் பார்வையாளர்களுக்கு இந்த போட்டிகள் மூலம் மிகச்சிறந்த பொழுதுபோக்கை வழங்க உறுதிபூண்டுள்ளோம்.
கிரிக்கெட் மீது உலகளாவிய அளவில் ஆர்வத்தை வலுப்படுத்துவதே இப்போட்டியின் நோக்கமாகும். பொழுதுபோக்கு மற்றும் கிரிக்கெட் துறையில் மிகப்பெரிய ஆளுமைகளை இந்த போட்டிகளில் கொண்டுவரவுள்ளோம். பங்கேற்கவுள்ள பல பிரபலங்களை அறிவிப்பது மகிழ்ச்சி. உலகளவில் அனைத்து கிரிக்கெட் பிரியர்களுக்கு, ஒரு அற்புதமான தொடர் விளையாட்டு போட்டிகளை வழங்க ஆவலாக உள்ளோம்" என்றார்.
ஸ்பான்சர் செய்யும் 'காஷா'
சூப்பர் 10 கிரிக்கெட்டின் இயக்குநர் சஞ்சய் விஜய் ராகவன்,
“கிரிக்கெட் வீரர்களும் பிரபலங்களும் ஒன்றிணைவதைக் காணும் சூப்பர் 10 லீக்கை ஏற்பாடு செய்வதில் நாங்கள் மிக மகிழ்ச்சி அடைகிறோம். போட்டிகள் எப்போது தொடங்கும் என மிக ஆவலாக உள்ளது. இந்தப் போட்டியில் சுதீப் கிச்சா மற்றும் கிறிஸ் கெய்ல் போன்ற ஆளுமைகள் இருப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி.
பெரும் ஆளுமைகள் பங்கேற்பது ரசிகர்களுக்கு பெரிய உற்சாகத்தை அளிக்கும். இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் பிரியர்கள் எதிர்பார்க்கும் ஒரு மிகச்சிறந்த விளையாட்டு போட்டியாக இதை உருவாக்க உத்தேசித்துள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதன்மை ஸ்பான்சரான காஷாவின் தலைமை நிர்வாக அதிகாரியும், நிறுவனருமான குமார் கௌரவ் கூறுகையில், “இப்போட்டிக்கு நிதியுதவி வழங்குவது மிகுந்த மகிழ்ச்சி. இது ஒரு அற்புதமான பொழுதுபோக்கு போட்டி. இது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் தனித்துவமான கிரிக்கெட் விளையாட்டாக இருக்கும். இந்த விளையாட்டு போட்டியில் எங்கள் 'காஷா' என்ற பிராண்டும் இணைந்திருப்பது மகிழ்ச்சி" என்றார்.
மேலும் படிக்க | ஜார்க்கண்ட் அணியுடன் தோனி: கிரிக்கெட் களத்தில் பார்க்க ரசிகர்கள் உற்சாகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ