ஒரே தொடரில் 39 சிக்ஸர்... புது சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல், 22 பந்துகளில் 77 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்!

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Mukesh M | Last Updated : Mar 3, 2019, 03:28 PM IST
ஒரே தொடரில் 39 சிக்ஸர்... புது சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்! title=

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல், 22 பந்துகளில் 77 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்!

மேலும் இத்தொடரில் 39 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம், ஒருநாள் போட்டித் தொடர் ஒன்றில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி செயின்ட் லூசியா மைதானத்தில் நடைபெற்றது. 
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 28 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது. 

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் தாமல், வெறும் 21 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். 

இதனையடுத்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் கிறிஸ் கெய்ல் வெறும் 27 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஆட்டத்தின் 12.1-வது ஓவர்களிலேயே வெற்றி இலக்கை மேற்கிந்தியா எட்டியது. 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்களை பறக்கவிட்ட கிறிஸ் கெயிலின் அதிரடி ஆட்டத்தால் மேற்கிந்திய தீவுகள் அணி அதிரடி வெற்றி பெற்றது.

மேலும் ஒரு தொடரில் அதிகம் சிக்சர் அடித்தவர் என்ற சாதனையையும் கிறிஸ் கெய்ல் படைத்துள்ளார். இத்தொடரில் அவர் மொத்தமாக 39 சிக்சர்கள் அடித்துள்ளார். முன்னதாக இந்த தொடருக்கு பின் ஓய்வு பெற போவதாக கெய்ல் அறிவித்திருந்தார். பின்னர் இதனை மறுபரிசீலனை செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.

இந்நிலையில் தற்போதைய போட்டியில் கிறிஸ் கெய்யிலின் ஆட்டம் அவர் தனது பார்மை இயக்கவில்லை, கெய்ல் விலகினால் அது அணிக்கே பெரும் இழப்பு என உணர்த்தியுள்ளது.

Trending News