சீனா ஓபன் டென்னிஸ் : சானியா ஜோடி காலிறுதிக்கு தகுதி.

Last Updated : Oct 5, 2017, 09:58 AM IST
 சீனா ஓபன் டென்னிஸ் : சானியா ஜோடி காலிறுதிக்கு தகுதி. title=

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் அந்நாட்டின் தலைநகரான பீஜிங்கில் கடந்த 29-ம் தேதி தொடங்கியுள்ளன. அக்டோபர் 8-ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.

இத்தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா - சீனாவின் ஷூவாய் பெங் ஜோடி, பெல்ஜியத்தின் எல்சி மெர்டன்ஸ் - ஹாலாந்தின் டெமி ஸ்கூர்ஸ் ஜோடியை எதிர்கொண்டது.

இப்போட்டியில், 7-5, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற சானியா ஜோடி காலிறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றது.

Trending News