Jasprit Bumrah: எனக்கு போட்டி யார் தெரியுமா? 3 பேரை சொல்லி நெகிழ்ந்த ஜஸ்பிரித் பும்ரா

Jasprit Bumrah: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்  ஆட்டநாயகன் விருதை பெற்ற பிறகு பேசிய ஜஸ்பிரித் பும்ரா, தனக்கு யார் போட்டி என்ற விவரத்தை நெகிழ்ச்சியுடன் கூறினார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 5, 2024, 09:52 PM IST
  • 2வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி
  • இங்கிலாந்து அணியை வீழ்த்தியது
  • ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு
Jasprit Bumrah: எனக்கு போட்டி யார் தெரியுமா? 3 பேரை சொல்லி நெகிழ்ந்த ஜஸ்பிரித் பும்ரா title=

Jasprit Bumrah: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. விசாகப்பட்டனத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி வாகை சூடியது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முன்னிலையில் இருந்த நிலையில், இப்போது இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை ஒன்றுக்கு ஒன்று என சமன் செய்திருக்கிறது இந்திய அணி. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மொத்தமாக இந்த டெஸ்ட் போட்டியில் மட்டும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரின் துல்லியமான பந்துவீச்சு இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி வலுவான நிலையிலேயே இருந்தது. 150 ரன்கள் வரை ஒரு விக்கெட் மட்டுமே இழந்திருந்த இங்கிலாந்து அணி, பும்ராவின் அசத்தலான பந்துவீச்சால் 253 ரன்களுக்கு சுருண்டது. அதனால் முதல் இன்னிங்ஸில் 143 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனபோதும் 399 ரன்கள் இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்க முடிந்தது.

மேலும் படிக்க | ரிவ்யூ எடுக்கச் சொல்லி அடம்பிடித்த குல்தீப்... கண்டுக்காத ரோஹித் சர்மா - கடைசியில் நடந்தது இதுதான்!

இரண்டாவது இன்னிங்ஸிலும் முக்கியமான மூன்று விக்கெட்டுகளை தட்டி தூக்கி அந்த அணியின் முதுகெலும்பையே உடைத்தார். இதானலேயே இந்திய அணி இவ்வளவு பெரிய வெற்றியை பெற முடிந்தது. அதனால் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். போட்டிக்குப் பிறகு பேசிய ஜஸ்பிரித் பும்ரா, " வேகப்பந்து வீச்சாளர்கள் என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு இளைஞராக பந்துவீசும்போது நான் யார்க்கர் வீசவே கற்றுக் கொண்டேன். யாரும் எனக்கு போட்டி இல்லை. எல்லா வேகப்பந்துவீச்சாளர்களையும் எனக்கு பிடிக்கும். அவர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஜாகீர் கான் ஆகியோரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். " என தெரிவித்தார். 

அவருக்கு அடுத்தபடியாக சிறப்பாக பந்துவீசியவர் அஸ்வின். அவர் முதல் இன்னிங்ஸில் விக்கெட்டே எடுக்காமல் இருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை எடுத்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கட்டில் மொத்தம் 499 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார் அஸ்வின். 500 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற மைல்கல்லை எட்டிய மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரர் எனும் சாதனையை படைக்க இன்னும் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே எஞ்சியிருக்கிறது அவருக்கு. ராஜ்கோட்டிடில் நடைபெறும் அடுத்த டெஸ்ட் போட்டியில் இந்த மைல்கல்லை எட்டி வரலாற்று சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | IND vs ENG: 3வது டெஸ்ட் போட்டியிலும் விராட் கோலி இல்லை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News