IND vs SL: தம்பி நீங்க உடம்ப கவனிங்க... உம்ரான் மாலிக்கை நம்பி பும்ராவை கழட்டிவிடும் பிசிசிஐ

India vs Srilanka ODI Series: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் அணிக்கு போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் உடற்தகுதி காரணத்தால் தொடரில் இருந்து விலக உள்ளதாக அதிர்ச்சி தகவல் ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 9, 2023, 05:34 PM IST
  • நாளை மதியம் 1.30 மணிக்கு முதல் ஒருநாள் போட்டி தொடக்கம்.
  • சீனியர் வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர்.
IND vs SL: தம்பி நீங்க உடம்ப கவனிங்க... உம்ரான் மாலிக்கை நம்பி பும்ராவை கழட்டிவிடும் பிசிசிஐ title=

IND vs SL ODI Series : டி20, ஒருநாள் தொடர்களை விளையாட இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அதை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. தொடர் நாயகனாக அக்சர் படேல் தேர்வானார். 

இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நாளை (ஜன. 10) தொடங்க உள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணிக்கு ரோஹித் சர்மா தலைமையேற்க உள்ளார். தொடர்ந்து, சீனியர் வீரரான விராட் கோலி, கேஎல் ராகுல், காயத்தில் இருந்து மீண்டுள்ள பும்ரா, ஷமி ஆகியோர் மீண்டும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளனர். ரோஹித், விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோருக்கு டி20 அணயில் ஏற்கெனவே வாய்ப்பளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், காயத்தில் மீண்டு வந்த பும்ராவின் உடற்தகுதி காரணமாக ஜஸ்பிரித் பும்ரா இலங்கை உடனான ஒருநாள் தொடரில் இருந்து விலக்கிக்கொள்ளப்படுகிறார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பை, டி20 உலகக்கோப்பை தொடரில் அவர் பங்கேற்காதது பலத்த சேதாரத்தை ஏற்படுத்திய நிலையில், இந்தியாவில் இந்தாண்டு இறுதியில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கு பும்ராவை தயார் படுத்த பிசிசிஐ பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. 

சமீபத்தில், பும்ரா காயத்தில் இருந்து மீண்டுவிட்டதாகவும், இலங்கை தொடரில் விளையாட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதியை நிரூபித்துவிட்டதாகவும் பிசிசிஐ கூறியது. எனவே, சுமார் நான்கு மாதங்களுக்கு இந்திய அணியில் இணையப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. https://zeenews.india.com/tamil/sports/team-india-magic-bowler-bumrah-re...

மேலும் படிக்க | IPL 2023: இந்த 5 சிஎஸ்கே வீரர்களுக்கு ஐபிஎல் 2023-ல் நிச்சயம் வாய்ப்பு கிடைக்காது!

ஆனால், தற்போது அவர் விலக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்திருப்பது அவரின் உடற்தகுதி இன்னும் சீராகவில்லை என்பதை உறுதி செய்கிறது. இதனால், தொடர்ந்து இந்திய அணி பின்னடைவை சந்திக்க வாய்ப்புள்ளது. இதனை இன்னும் பிசிசிஐ உறுதிசெய்யவில்லை என்றாலும், விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளது. 

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை கவுகாத்தியில் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் தொலைக்காட்சியில் இலவசமாகவும், ஓடிடி  ஹாட்ஸ்டாரில் சந்தாவுடனும் நேரலையில் பார்க்கலாம்.  

மேலும் படிக்க | IND vs SL: முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News