பிஸியாக இருக்கும் டிராவிட்... இந்த தொடரில் இந்தியாவுக்கு இவர் தான் கோச்!

Indian Cricket Team: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட் உலகக் கோப்பை தொடரில் அதிகம் கவனம் செலுத்த உள்ள நிலையில், ஆசிய விளையாட்டு தொடரில் விவிஎஸ் லஷ்மண் பயிற்சியாளராக செயல்படுகிறார்.

Written by - Sudharsan G | Last Updated : Aug 27, 2023, 12:08 PM IST
  • ஆசிய விளையாட்டு தொடர் செப். 23ஆம் தேதி தொடங்குகிறது.
  • அக். 9ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெறும்.
  • இதில், ருத்ராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்படுகிறார்.
பிஸியாக இருக்கும் டிராவிட்... இந்த தொடரில் இந்தியாவுக்கு இவர் தான் கோச்! title=

Indian Cricket Team: இந்திய கிரிக்கெட் அணிக்கு அடுத்த மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமான காலகட்டம் என்பது ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆசிய கோப்பை தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், ஆசிய விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட தொடர்களுடன் ஐசிசி உலகக் கோப்பை தொடரும் நடைபெற இருக்கிறது. உலகக் கோப்பை தொடரை கைப்பற்றவதன் மூலம் இந்தியாவின் நீண்ட கால ஐசிசி கோப்பை தாகம் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொந்த மண்ணில் வேறு நடப்பதால் இந்திய அணிக்கே அதிகம் வாய்ப்பிருப்பதாகவும் ஆருடம் சொல்லப்படுகிறது. அதற்கு முன் பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கேதசேம் என உலகக் கோப்பைக்கு பயிற்சியாக இருக்கும் வகையில் ஆசிய கோப்பை தொடர் இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. வரும் ஆக. 30ஆம் தேதி ஆசிய கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இதில், பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் முதல் போட்டியில் மோதுகின்றன. இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வரும் செப். 2ஆம் தேதி இலங்கையில் சந்திக்கிறது. 

ஆசிய கோப்பைக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சஹால், அஸ்வின் உள்ளிட்டோருக்கு இதில் வாய்ப்பளிக்கப்படவில்லை. ராகுல் டிராவிட் பயிற்சியாளராக தொடரும் நிலையில், சஞ்சு சாம்சன் 18ஆவது வீரராக அணியில் இடம்பெற்றுள்ளார். காயத்தில் இருந்து மீண்ட ஷ்ரேயஸ் ஐயர், சற்று குணமடைந்திருக்கும் கே.எல். ராகுலும் ஆசிய கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளனர். மேலும், இளம் வீரர் திலக் வர்மாவும் மிடில் ஆர்டரில் இடது கை பேட்டர் தேவைக்காக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால், சூர்யகுமார் யாதவிற்கு சற்று நெருக்கடியாக இருக்கும். 

மேலும் படிக்க | ஆசிய கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக ஆடும் இந்திய அணியின் பிளேயிங் லெவன்

இவை ஒருபுறம் இருக்க, ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இளம் இந்திய அணி, சீனாவில் நடைபெற இருககும் ஆசிய விளையாட்டு தொடரில் பங்கெடுக்க உள்ளது. செப். 23ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் அக். 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி முதல் முறையாக ஆசிய விளையாட்டு தொடரில் பங்கேற்கிறது. இதில்,  யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், சிவம் மாவி, ஷிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்) உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். 

சீனியர் அணியின் பயிற்சியாளராக டிராவிட் செயல்பட்டு வருவதாலும், உலகக் கோப்பை தொடருக்காக அதிகம் கவனம் செலுத்த வேண்டுமென்பதாலும் ஆசிய விளையாட்டு தொடருக்கு பயிற்சியாளராக விவிஎஸ் லஷ்மண் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் சிறந்த பேட்டரும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவருமான லஷ்மண் இளம் இந்திய அணியுடன் தலைமை பயிற்சியாளராக சீனாவுக்கு செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடவர் அணி மட்டுமின்றி, மகளிர் அணியும் அந்த தொடரில் பங்கேற்கும். மகளிர் அணிக்கு இடைகால தலைமை பயிற்சியாளராக ஹிருஷிகேஷ் கனிட்கர் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லக்ஷ்மனைத் தவிர, ஆசிய விளையாட்டு தொடருக்கான இந்திய ஆடவர் அணியின் மற்ற பணியாளர்களில் முன்னாள் லெக்-ஸ்பின்னர் சாய்ராஜ் பஹுதுலே பந்துவீச்சு பயிற்சியாளராகவும், முனிஷ் பாலி பீல்டிங் பயிற்சியாளராகவும் இருப்பார்கள். இந்திய மகளிர் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் மற்றும் துணை பணியாளர் நியமனம் டிசம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2 டெஸ்ட் மற்றும் 34 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய கனிட்கர் இதற்கு பொறுப்பாக உள்ளார். பிசிசிஐயின் 92வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் (ஏஜிஎம்) செப்டம்பர் 25 அன்று மும்பையில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. சென்றாண்டின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி அன்று மும்பையிலேயே நடைபெற்றது.

மேலும் படிக்க | கெத்து காட்டிய கில், கோலி... இன்னும் யோ-யோ டெஸ்டை செய்யாத 5 இந்திய வீரர்கள் யார் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News