IND vs BAN: இந்திய அணியின் பிளேயிங் லெவன்... ஓப்பனிங்கில் யார்? கம்பீர் பிளான் என்ன?

India vs Bangladesh: குவாலியரில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யார் யார் இடம்பெற வாய்ப்புள்ளது என்பதை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Oct 4, 2024, 07:13 PM IST
  • குவாலியர், டெல்லி, ஹைதரபாத் ஆகிய நகரங்களில் டி20 போட்டி நடைபெறுகிறது.
  • அக். 6, 9, 12 ஆகிய தினங்களில் போட்டி நடைபெறுகிறது.
  • சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுகிறார்.
IND vs BAN: இந்திய அணியின் பிளேயிங் லெவன்... ஓப்பனிங்கில் யார்? கம்பீர் பிளான் என்ன? title=

India vs Bangladesh 1st T20, Playing XI: வங்கதேசம் அணி இந்தியாவுக்கு தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஏற்கெனவே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா - வங்கதேச அணிகள் மோதின. கடந்த செப். 19ஆம் தேதி சென்னையில் தொடங்கிய போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்திலும், செப். 27ஆம் தேதி கான்பூரில் தொடங்கிய போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது. 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி ரோஹித் சர்மா & கோ அடுத்த நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு காத்திருக்கிறது. 

அதற்கு இடையில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நடைபெற உள்ளன. குவாலியர், டெல்லி, ஹைதராபாத் ஆகிய மூன்று நகரங்களில் நடைபெற உள்ளது. முதல் போட்டி வரும் அக். 6ஆம் தேதி அன்று குவாலியர் ஸ்ரீமந்த் மாதவராவ் சிந்தியா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதையடுத்து, அக். 9, 12 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து டி20 போட்டிகள் நடைபெறுகின்றன.

டி20 உலகக் கோப்பைக்கு... 

டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்தியா அதன் சொந்த மண்ணில் முதல்முறையாக டி20 தொடரை விளையாட உள்ளது. ஜிம்பாப்வே, இலங்கை அணிகளுக்கு எதிராக இந்திய அணி டி20 தொடர்களை கைப்பற்றியிருந்தது. கம்பீர் தலைமை பயிற்சியாளராக வந்து இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்தியா வைட் வாஷ் செய்தது. அதை இங்கேயும் இந்தியா தொடர அதிக வாய்ப்புள்ளது. சூர்யகுமார் யாதவ் கேப்டன்ஸியை மேற்கொள்கிறார். அந்த வகையில், நாளை மறுதினம் வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற உள்ள முதல் டி20 போட்டிக்கான இந்தியாவின் பிளேயிங் லெவனை இங்கு காணலாம்.

மேலும் படிக்க | இந்தியா, வங்கதேசம் டி20 தொடர் ; நேரடி ஒளிபரப்பை எந்த சேனலில் இலவசமாக பார்க்கலாம்?

ஓப்பனிங்கில் அபிஷேக் சர்மா உடன் யார் களமிறங்குவார் என்ற கேள்வி பலமாக எழுந்தாலும் அதில் சஞ்சு சாம்சனை தவிர்த்து வேறு ஒருவர் விளையாடுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. எனவே, அவர்தான் ஓப்பனிங்கில் இறங்கி அதிரடி காண்பிக்க வேண்டும். ஒருவேளை சஞ்சு தனது இடத்தை பலமாக பதிக்க இந்த வாய்ப்பு பெரும் உதவியாக அமையலாம். 

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?

பழையபடி சூர்யகுமார் யாதவ் மூன்றாவது வீரராக வந்தார் எனில் ரியான் பராக் 4வது வீரராக வர வாய்ப்புள்ளது.  இடது - வலது காம்பினேஷனில் கம்பீர் பெரிய நம்பிக்கை உடையவர் என்பதால் ரியான் பராக் சற்று பின்தங்கி 4வது இடத்தில் ரின்கு சிங் வரலாம். 5வது, 6வது வீரர்களாக ரியான் பராக், ஹர்திக் பாண்டியா விளையாடலாம். மற்றொரு ஆல்-ரவுண்டராக வாஷிங்டன் சுந்தர் இடம்பெறுவார். இந்த 7 பேட்டர்களில் ரியான் பராக், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் பந்துவீசுவார்கள். வேண்டுமென்றால் சூர்யாவும், அபிஷேக் ஆகியோரும் பந்துவீசுவார்கள். 

அதேபோல், சுழற்பந்துவீச்சில் ரவி பிஷ்னோய் உடன் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தியும் மாயாஜாலம் காட்டுவார். வேகப்பந்துவீச்சில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் உடன் புதிய வேகப்புயல் மயங்க் யாதவும் தனது அறிமுக போட்டியில் விளையாட காத்திருக்கிறார் எனலாம். இவர்கள்தான் முதல் போட்டியின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்கள்.

இந்திய அணி பிளேயிங் லெவன்: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, மயங்க் யாதவ்.

மேலும் படிக்க | தோனி அப்படி செய்யவே இல்லை, ஹர்பஜன் பொய் சொல்கிறார் - சிஎஸ்கே பீல்டிங் கோச்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News