USA vs IND Match: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் (ICC T20 World Cup 2024) கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அந்த வகையில், தற்போது குரூப் சுற்று போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியும் த்ரில்லராக மாறிவரும் சூழலில், ஒவ்வொரு போட்டியும் மிகுந்த முக்கியத்துவமும் பெறுகிறது.
இதுவரை சூப்பர் 8 சுற்றுக்கு (Super 8 Qualification) ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அதிகாரப்பூர்வமாக தகுதிபெற்றுள்ளன. அதே நேரத்தில் குரூப் பி சுற்றில் நமீபியா மற்றும் ஓமன் அணிகள் தொடரில் இருந்தும் அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளன. மேலும், பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பும் மிகவும் குறைந்துள்ளது. அதே நேரத்தில், குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, மேற்கு இந்திய தீவுகள் உள்ளிட்ட அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற கடும் போட்டி நிலவுகின்றன.
USA vs IND: நேரலையில் எப்படி பார்ப்பது?
இப்படியான சூழலில்தான் தற்போது ஒவ்வொரு போட்டியையும் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்கின்றனர். அந்த வகையில், இன்று அமெரிக்கா - இந்தியா (USA vs IND Match) அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. நியூயார்க் நகரில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டியை இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணி முதல் நேரலையில் காணலாம். தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஓடிடியில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரிலும் போட்டியை நேரலையில் காணலாம்.
செய்யுமா இந்திய அணி?
இரு அணிகளும் தங்களின் முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்டதால், இன்றைய போட்டியை வெல்லும் அணி குரூப்பில் முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும். அமெரிக்க அணி (Team America) கத்துக்குட்டி அணியாக பார்க்கப்பட்டாலும், கனடா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் இந்திய அணி (Team India) இந்த மூன்று விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், இன்றைய போட்டியில் இதை செய்தாலே அந்த அணிக்கு வெற்றி உறுதியாகி, சூப்பர் 8 சுற்றும் தகுதிபெற்றுவிடலாம். அதுகுறித்து விரிவாக இதில் காணலாம்.
மூன்று முக்கிய விஷயங்கள்
இந்திய அணிக்கு கடந்த போட்டிகளில் பிரச்னையாக இருப்பது பேட்டிங்தான். பந்துவீச்சு படை செட்டிலாகிவிட்டது. குல்தீப் யாதவ் (Kuldeep Yadav) இல்லாமலேயே வெற்றி பெற்றுவிடலாம் என்ற மனநிலைக்கு தற்போது இந்திய அணி வென்றுவிட்டது. அந்த வகையில், இன்று இந்திய அணி வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்றால் மிடில் ஆர்டர் பேட்டிங் இன்னும் பலமாக மாற வேண்டும், இது முதல் விஷயம்.
குறிப்பாக, விராட் கோலி (Virat Kohli) ஓப்பனிங்கிலேயே தொடர்வாரா அல்லது ரிஷப் பண்ட் (Rishabh Pant) ஓப்பனராக வருவாரா என்பது ரோஹித் சர்மா - ராகுல் டிராவிட் (Rohit Sharma - Rahul Dravid) கையில் தான் இருக்கிறது. எனவே இந்த மூன்று வீரர்கள் குறித்து நம்மிடம் பெரிதாக சொல்ல ஏதுமில்லை. ஆனால் மறுபுறம், சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே அல்லது சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகிய மிடில் ஆர்டர் வீரர்கள் நிச்சயம் தங்களின் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும்.
பந்து பழசாக பழசாக நியூயார்க் ஆடுகளத்தில் ரன்கள் எடுப்பது சிரமமாக இருக்கிறது. எனவே, சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) போன்றோர் தங்களின் அதிரடி பாணியை சற்றே மாற்றியாக வேண்டும். பீல்டிங்கிற்கு தகுந்தது போல் ஷாட் ஆடுவதில் சூர்யகுமார் கில்லாடி... சரியாக கேப் பார்த்து பவுண்டரி அடிக்கும் திறனை சூர்யகுமார் இன்று கைக்கொள்ளும்பட்சத்தில் இந்தியாவின் ஸ்கோர் உயர வாய்ப்புள்ளது.
அதேபோலவே, சஞ்சு சாம்சனை (Sanju Samson) தூபேவுக்கு பதில் இறக்குவதும் இங்கு அவசியப்படுகிறது, இது இரண்டாவது விஷயம். தூபேவின் (Shivam Dube) பாணி இங்கே கைக்கொடுப்பது கடினம்தான். ஹர்திக், ஜடேஜா, அக்சர் ஆகியோர் நீண்ட பார்ட்னர்ஷிப்பை நோக்கி விளையாட வேண்டும். பந்துவீச்சில் பும்ரா முதல் ஓவரை வீச வேண்டும், இது மூன்றாவது விஷயம். பும்ரா முதல் ஓவரை வீசினால் விரைவாகவே அமெரிக்க அணியின் விக்கெட்டுகளை கைப்பற்றலாம். இந்த மூன்று விஷயங்களை செய்தாலே இந்திய அணிக்கு சூப்பர் 8 சுற்று டிக்கெட் இன்று உறுதியாகிவிடும்.
மேலும் படிக்க | விராட் கோலி இல்லை... இனி அதிரடி ஓப்பனர் இவர்தான் - இந்திய அணிக்கு வெற்றி தொடரும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ